தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, July 9, 2021

 

தோழர்களே! தோழியர்களே!! நமது மாவட்ட செயலாளர் தோழர். கா. கிள்ளிவளவன் அவர்கள் 30.06.2021 அன்று பணி நிறைவு பெற்றுள்ளார். அதே சமயம் நமது புதிய தொழிற்சங்க கட்டிட அலுவலக திறப்பு விழா இவை இரண்டும் ஒரே நாள் நிகழ்ச்சியாக 10.07.2021 அன்று நடத்த உள்ளோம். ஆகையினால் இந்த       அழைப்பையே நேரிடை அழைப்பாக ஏற்று அனைத்து முன்னாள் இன்னாள் கிளை சங்க செயலர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள், தோழியர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது. 🙏🙏🙏

 


 

JTO அரவாழி மற்றும் தோழர் சேகர் இருவரும் 
மா. செயலரை அவரது இல்லத்தில் சந்தித்த போது.
====================================================================

இன்று.... 08/07/2021...                 இந்திய தபால் தந்தி தொழிற்சங்க இயக்கத்தின் (NFPTE ) முன்னாள் பொதுச்செயலாளரும்...  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் டி. ஞானையா அவர்களின்  நினைவு நாள். நமது நெஞ்சார்ந்த... நினைவார்ந்த அஞ்சலிகள் !                                அஞ்சல்துறை தந்த அரியதோர் முத்து தோழர் டி. ஞானையா .                                                                07.01.1921 ல் மதுரை திருமங்கலம் அருகிலுள்ள நடுக்கோட்டையில் பிறந்தார் .                                         1941 அக்டோபரில் அஞ்சல் எழுத்தராக கரூரில் சேர்ந்தார்.                                                     1942 முதல் 1946 வரை இராணுவ அஞ்சல் சேவையில் சேர்ந்து பர்மா லிபியா சைப்ரஸ் கராச்சி ஆகிய இடங்களில் பணியாற்றினார் .                       
திருச்சியில் பணியாற்றியபோது தபால் தந்தி தொழிற்சங்கத்தில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார் . உதவிக் கோட்ட செயலரில் ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்து NFPTE செயலராக 1963 லும், NEPTE பொதுச்செயலராக ( Secretary General ) 1965 லும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.                                               1965 முதல் 1970 வரையிலும் மற்றும்...1976 முதல் 1978 வரையிலும் NEPTE யின் Secretary General ஆக இருந்தார்.                       அவர் ஒரு சிறந்த மார்க்சிய பேரறிஞர்.             நமது வாழ்வை மேம்படுத்த நாளும் போராடும் சமூகத்திற்காக தோழர் ஞானையா அளித்த விலைமதிப்பில்லா கொடைக்காக அவரை வணங்குவோம்!  ஒவ்வொரு தபால் தந்தி ஊழியரும் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் உறுப்பினர் என்ற வகையில் அற்புதமான மனித நேயர் மாபெரும் தோழர் ஞானையா குறித்து பெருமை கொள்வோம்!

- பாலமுருகன், மாநில அமைப்புச் செயலர்.


 

அன்புத் தோழரும் NFTE பேரியக்கத்தின் தமிழ் மாநிலச் செயலருமான தோழர் K.  நடராஜன் அவர்கள் தனது, பணியிலும், படிப்பிலும், பதவியிலும் படிப்படியாக முன்னேறியவர்.  சங்கப் பணியிலும் சாம, பேத, தான, தண்டத்தை பிரயோகித்துத்தான் இன்றைக்கு வளர்ந்திருக்கிறார். தமிழ் மாநிலத்தின் செயல்பாட்டுத் தளத்தில் அவரது செயல் திட்ட  பதிவுகள்தான் இன்றைய கால கட்டத்தில் அகில இந்தியச் சங்கத்துக்கு வலு சேர்த்திருக்கிறது.   குடும்ப உறவுகளிலும் அவர் புரட்சிகரமான மாற்றங்களைச் செய்திருக்கிறார்.  அதை லாகவமாகக் கையாண்டு இன்றைக்குத் தன் மகனுக்கு சாதி மறுப்புத் திருமணத்தையும் நடத்தியிருக்கிறார். 

அன்புத் தோழர் நடராஜன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். அவரையும், அவர்தம் மனைவி, மகன், மருமகள் அனைவரையும் இந்தத் தருணத்தில் அன்போடு வாழ்த்துகிறேன்.                   எங்களின் முன்னாள் மாவட்டச் செயலரே!   உங்களை இனிய இப் பிறந்த நாளில் வாழ்த்துவதில் தஞ்சை பெருமிதம் கொள்கிறது!

===============================================================

அன்பிற்கினிய தமிழ் மாநிலத்தின் துணைச் செயலர் தோழர், தலைவர், தம்பி திரு. முரளி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

மாநிலத்தின் இரு கரங்கள், இருகண்கள், இரட்டைக் குழல் துப்பாக்கி போல் இணைந்த செயல் வீரர்கள்   முரளி – நடராஜன். 

இரு பெரும் ஆளுமைக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் எனும் போது இவைகள் நெஞ்சில் நிழலாடுகிறது. உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை. கூப்பிட்ட குரலுக்கு உடன் குரல் மடுக்கும் உங்களை வாழ்த்துவதில் தஞ்சை மாவட்டச் சங்கம் மேலும் பெருமைப்படுகிறது.

அன்புடன் வாழ்த்தி மகிழும் நெஞ்சங்கள்,

கா. கிள்ளிவளவன்,

எஸ். சிவசிதம்பரம்.



 


நமது மாவட்ட செயலாளர் தோழர் கா. கிள்ளிவளவன் பணி நிறைவு விழா நிர்வாகம் மூலம் கௌரவிக்கப்பட்டு   வெளியில் வந்து நமது தோழர்களை சந்தித்த போது.............

 




Thursday, July 8, 2021

 30.06.2021 அன்று பணி நிறைவு பெற்ற நண்பர்கள் கிள்ளிவளவன் & தங்கமணி அவர்களின் ஓய்வு காலம் சிறக்க எல்லாம் வல்ல முருகப்பெருமானை பிராத்திக்கின்றேன்...

முரளிதரன்.

மாநில துணைச் செயலர்.




Our Best Wishes for A Happy Retirement life

A Staunch disciple of Com. Jagan, Working Tirelessly for the welfare of Masthoors

Now District Secretary of Tanjore

A Close Confident of Com. Natarajan Circle secretary, Best wishes Killi,A long way to go

Hold high the Red flag.                                   

முன்னாள் சம்மேளனச் செயலாளர் 

தோழர். S.S. கோபாலகிருஷ்ணன் அவர்கள் 

கிள்ளிக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தி!







 

தோழன் கிள்ளி!

தொய்வின்றி உழைத்த அன்புத் 

தோழன் கிள்ளிவளவனுக்கு

இலாகா இன்று ஓய்வு 

கொடுத்து வழியனுப்புகிறது! 

நாற்பதாண்டு கால 

தொலைத் தொடர்பு வாழ்க்கையில் 

இருபத்தைந்து ஆண்டு காலம் 

கிள்ளியோடு சங்கத் தொடர்பு.

அவரோடு பயணித்த காலத்தில் 

மறக்க முடியாத சில நிகழ்வுகளை

உங்களோடு பகிர விரும்புகிறேன்.


TMTCLU மாவட்டச் சங்கத்தை 

தமிழகத்தில், தஞ்சையில்

முதலில் துவக்கிய பெருமை 

நமக்குண்டு.   முதல் மாவட்டச் 

செயலர் தோழர் கிள்ளி.

முதல் மாவட்டத் தலைவர் 

தோழர். பிரின்ஸ்.

பொருளராக நான்.

அன்றைக்கு பகுதி நேரப் 

பணியாளர்களே இல்லையென்ற

நிலைமையை தஞ்சையில் 

உருவாக்கினோம்.  பக்கத்தில் உள்ள 

திருச்சி உள்பட பல மாவட்டங்கள் 

இது எப்படி சாத்தியம் 

என்று வியந்து போனார்கள்.

அவர்களுக்கு தீபாவளி போனஸ், 

ஏன் பொங்கல் போனஸ் கூட 

பெற்றுத் தந்தோம். 


பிறகு அப் பொறுப்புக்கு வந்த 

தோழர் கலைச்செல்வன், 

கிள்ளியோடு இரண்டறக் கலந்து 

சிறப்பாகச் செயல்பட்டார்.


ஒற்றுமையின் சின்னமாக விளங்கிய

தஞ்சையில் CKM அணி என்ற 

பிணியின் பாதிப்பால் TMTCLU

உடைக்கப்பட்டது.  இன்று அது 

காணாமலும் போய் விட்டது.

ஆரூர் மாவட்ட மாநாட்டில் பல்வேறு 

பிரச்சனைகளுக்குப் பின் NFTE

மாவட்டச் செயலரானார் 

தோழர் கிள்ளி.

தோழியர் லைலாபானு அவர்களை 

தலைவராகவோ, பொருளராகவோ 

தேர்வு செய்ய முயற்சித்தார். 

நடைபெறவில்லை.


ஒற்றை ஆளாய் இயக்கத்தை 

கொண்டு சென்ற தோழரின்

தாங்கும் சக்தியை பதம் பார்க்க

குடும்பத்தில் சோக நிகழ்வுகள்

ஒன்றன்பின் ஒன்றாய் வந்து

அவரைக் கலங்கடித்தது.

தாயை இழந்த தோழனுக்கு அடுத்து 

ஒரு பேரிழப்பு. தான் உயிராய்

நேசித்த 18 வயது மகளை 

அநியாயமாய் இழந்தார்.  புத்திர 

சோகத்தில் அந்தக் குடும்பம் பட்ட 

வேதனை சொல்லி மாளாது. 

அனைத்தையும் அடிமனதில் 

பூட்டி வைத்து 

மாவட்டச் சங்கத்தை 

தொய்வின்றி நடத்திச் சென்றார்.

தஞ்சையில் தனியாளாய்  எவராலும்

சங்கம் நடத்திட முடியாது என்ற 

மாயையை உடைத்தவர் 

தோழர் கிள்ளி. 

உடைத்தவர் மட்டுமல்ல, உயர்வான 

இரண்டு வேலைகளை அனைவரும்

பாராட்டும் வண்ணம் செய்து 

காட்டியவர் என்றால் மிகையாகாது.

1. சரிபார்ப்புத் தேர்தலில், தமிழகத்தில்,

தஞ்சையை தலைமைப் பீடத்தில் 

கொண்டு வந்து வைத்தார்.

இவரது செயல் திறனால்

ஈர்க்கப்பட்டவர் தோழர். சுந்தரராஜன்.

இவர் அண்ணா தொழிற்சங்கத்தின் 

மாவட்டச் செயலாளர். 

தானும், தனது உறுப்பினர்கள் என்று 

27 பேரையும் சேர்த்துக் கொண்டு 

நம்மோடு இணைந்தார்.

இன்று வரை கிள்ளியிடமிருந்து 

எந்த எதிர்பார்ப்புமின்றி, அவரது 

வலது கரமாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

2. அடுத்து தமிழ் மாநிலச் 

செயற்குழுவை நடத்தும் பொறுப்பு தஞ்சைக்கு.

கையில் நிதியில்லை.  

அணியின் ஒத்துழைப்பில்லை.

தோழர்களிடம் நேரடியாக செயலரே 

வேண்டுகோள் வைத்து 

மாநில செயற்குழுவிற்கு உதவிகள் கேட்டார்.

தோழர்கள் நிதியைக் கொட்டிக்

குவித்தார்கள்.  பலர் ஒரு சில 

செலவுகளை முழுமையாகவும் 

ஏற்றுக் கொண்டனர்.

செயற்குழு முடிந்து கையிருப்பும் 

இருந்தது !

இன்று வரை நிதியளிப்பிலும், 

சங்கச் செயல்பாட்டிலும்

பெரிதும் துணை நின்ற தோழியர். லைலாபானு.   

மாநில மகளிரணி கன்வீனராக சிறப்பாகச் 

செயல்பட்டார்.

மாவட்டச் சங்கச் செயல்பாடுகளில்

ஊக்கத்துடன் பங்கேற்ற அவரை 

இந்த நேரத்தில் பாராட்டி 

மகிழ்கிறேன்


20 ஆண்டுக் காலம் சங்கப் பணியில் 

அவரோடு இணைந்து பணியாற்றிய 

தோழர் சின்னப்பா அவர்கள் கிள்ளியின் 

நம்பிக்கை நட்சத்திரம்.

மன்னையிலிருந்து கிள்ளி

தஞ்சைக்கு வந்தவுடன் தவறாது

அவரை அழைத்துச் செல்பவர் 

இவர்தான்.

அதிகாரிகளோடு பேச்சு 

வார்த்தையில் பங்கேற்பது,

ஆர்ப்பாட்டங்களை நடத்துவது 

செய்திகளை அறிவிப்பது போன்ற

பணிகளைத் திறம்படச் செய்வார்.


அதை கொரோனா காலத்தில் 

இன்னும் ஆளுமையோடு, 

உடன் பயணித்து இன்று வரை 

உழைத்து  வருபவர் தோழர் 

பாலமுருகன் அவர்கள். 


கஜாப் புயல் காலத்தில் மாவட்டச்

சங்கத்தின் சார்பில் 

உறுப்பினர்களிடம் நிதி வசூல் 

செய்து  மாவட்டம் முழுமையும்   

ஒப்பந்தத் தொழிலாளிக்கு 

 உதவிய மாவட்டச் செயலரை 

 மறக்க முடியுமா!

அதே போல் ஓய்வூதியர் சங்கத்தின் 

மூலம் ஒரு லட்ச ரூபாய்க்கும் மேலான

பொருட்செலவில் பட்டுக்கோட்டை

பகுதி தோழர்களுக்கு நிவாரணம்

பெற்றுத் தந்தார்.

ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் 

செயலர் தோழர் சாமினாதன் 

அவர்கள் கிள்ளிக்கு பேருதவியாக

இருந்தவர். 

எல்லா சங்கத்துக்கும் உதவியாக 

நிற்கக் கூடிய அவரிடம், உரிமையோடு 

சில தேவைகளை முன் வைத்து 

அதற்கான உதவிகளைக் 

கேட்டுப் பெறுவார். 

அவரும் மனமுவந்து செய்திடுவார்.

கிள்ளிக்கு இவரும் நன்றிக்குரியவர்.


தோழியர் லைலாபானுவின் தாயார் 

மறைந்த போது, உடன் பிறந்த 

சகோதரன் போல் உடனிருந்து

அனைவரையும் அழைத்து 

இறுதிச் சடங்குகளை நிறைவாய் 

செய்து முடித்தவர் தோழர். கிள்ளி. 


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக் காரராக

அரசியல் நிலைபாடு எடுத்த

தோழர் கிள்ளி, அதிலும் தன் 

செயல் திறத்தை, பங்களிப்பை 

நிறைவாகச்செய்தவர்.   

கட்சி வழிகாட்டுதலும்

அவர்தம் செயல்பாட்டுக்கு 

ஒரு தூண்டுகோலே.


அதேபோல் ஒவ்வொரு அசைவையும் 

தோழர் நடராஜனிடம் தவறாது 

பகிரக் கூடியவர். அவர் விடுக்கும் 

வேலைகளை அச்சு பிசகாமல் 

செய்து முடிப்பார். நம்மோடு மாவட்டச் 

செயலராக இருந்த தோழர் நடராஜன்

இன்றைக்கு மாநிலச் செயலர்

அந்தஸ்தில் இருப்பதையும் அவரது 

அகில இந்திய அளவிளான 

திறமையையும் அடிக்கடி வியந்து 

பேசுவார்.


தோழர் கேசவன் காலம் தொட்டு

கிள்ளி காலம் வரை

வலைதளம், வாட்சப் போன்றவற்றில்

நான் சிறப்பாகச் செயல்பட தோழர்

நடராஜனைப் போன்று

கிள்ளியும் எனக்கு 

மிகப் பெரும்  தூண்டுகோல்.  என்னதான் 

உழைத்தாலும் அதன் அருமை, 

பெருமை உணராமல் கடந்து 

போகிறவர்கள் மத்தியில் எனது 

திறமையை, உழைப்பை இன்றும்

மதிக்கிறவர்கள் வெகு சிலரே!  

அதில் மிக முக்கியமானவர்கள்

தோழர் கிள்ளியும், லைலாபானுவும் 

என்றால் அது மிகையாது. 


தொழிற்சங்க வாழ்க்கையை

பத்தோடு பதினொன்றாகக் கடந்து 

போகாமல், என்னிடமும்  

நினைத்துப் பார்க்கின்ற அளவுக்கு  

செய்திகள் இருக்கிறது எனும் போது 

இதயம் நிறைகிறது. 


தோழன் கிள்ளி பணி ஓய்வில்தான் 

இன்று துறையை விட்டு விடை 

பெறுகிறார் என்பது நன்கு 

தெரிகிறது.   ஆனாலும், நம்மை 

விட்டு வெகு தூரம் ராணுவ 

எல்லைப் பகுதிக்குச் செல்வது போல 

மனம் மயங்குகிறது.  என்ன செய்வது!


அன்புத் தோழனின் துணைவியார்

அவர்கள் தன் கணவர் கிள்ளிக்கு

பக்கபலமாக, ஊக்க மருந்தாக 

இருந்ததால்தான் இன்றைக்கு 

தோழர் கிள்ளி அவர்கள் இலாகாவை 

விட்டு ஓய்வில் வெளி வரும்போது

சாதனை நாயகனாக மிளிர்கிறார். 

அன்புத் தோழன் கிள்ளியை இதயம்

நிறைந்து வாழ்த்துகிறேன்.

என்றும் அவரோடு பயணிக்க 

விரும்புகிறேன்.

அன்புடன்,

எஸ். சிவசிதம்பரம்,

மேனாள் மாநில துணைத் தலைவர்.

பட்டுக்கோட்டை.

=============================================================

 மரியாதைக்குரிய தோழர்கள் தஞ்சை மாவட்ட செயலர் கிள்ளிவளவன் புதுச்சேரி மாவட்ட செயலர் தங்கமணி கும்பகோணம் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் இன்று இலாக்கா பணியை நிறைவு செய்கிறார்கள் அவர்கள் மூவரும் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ TMTCLU மாநில சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தோழமையுடன் ஆர் செல்வம்

============================================================


தோழர் கிள்ளி இலாகா  பணி நிறைவு.அவர் மாவட்ட செயலாளர் பதவிக்கு வந்துலிருந்து போரட்டமே  அனைத்திலும் வெற்றி கண்டவர். சோதனையோ  வாழ்க்கை மற்றும் இலக்க பணி&மாவட்ட செயலர் பணி உண்ண கூடநேரம்இல்லாமால் பலவிமர்சனங்கள் தாண்டி வெற்றி கண்ட நமது மாவட்ட செயலாளர்(கிள்ளி) வாழ்த்த வயதுஇல்லை இருந்தாலும் நலமுடன் அனைத்து வளமும் பெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். வடசேரி P. பாலு என்ற பாலசுப்பிரமணியன்

================================================================




இன்று பணி ஓய்வுபெறும் தஞ்சை மாவட்ட செயலர் அருமைத் தோழர்  🌺கிள்ளிவளவன்🌺அவர்களின் பணி ஓய்வுகாலம் இனிதாக அமைய ,கோவை மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


30-06-2021 இன்று பணி ஓய்வு பெறும் தஞ்சை மாவட்ட செயலர் அருமைத் தோழர். கிள்ளிவளவன் அவர்களின் பணி ஓய்வு சிறக்க... சேலம் மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறேன். -ச.பாலகுமார்.








 நெஞ்சை அள்ளிய கிள்ளி நீடு வாழ்க...

=============================

நஞ்சையும்... புஞ்சையும்...

நிறைந்த தஞ்சையின்...

வாஞ்சைமிகு அடையாளம்...

தஞ்சை மாவட்டச்செயலர்..

தோழர் கிள்ளிவளவன்... அவர்கள்

30/06/2021 அன்று...

இலாக்காப் பணியில் இருந்து 

பணிநிறைவு பெறுகின்றார்...

ஒப்பந்த ஊழியரின் ஒளிவிளக்கு...

ஒப்பற்ற சங்கத்தின் மணிவிளக்கு...

மன்னையின் மைந்தன்...

செம்மண்ணின் தலைவன்....

துவளாத துன்பச்சுமைதாங்கி....

கொள்கை அகலாத அறந்தாங்கி...

தோழர். கிள்ளிவளவன் 

நீடுழி வாழ்க... நிறைந்து வாழ்க...

எளியோருக்காய் நித்தமும் வாழ்க....

அன்பு கொண்டு வாழ்த்தும்....

NFTE காரைக்குடி மாவட்டச்சங்கம்.

==================================================================

வணக்கம் தோழர் கிள்ளிவளவன்  அவர்களே நானும் நீங்களும்  ஒரே சாதி ஒரு ரூபாய்  எழபத்திஐந்துகாசுகள் சம்பளத்தில் மஸ்த்தூரக  வேலைக்கு சேர்ந்து 1968 ல் தஞ்சையில்  மறைந்த என் ஆருயிர் இளவல்  சந்திரபிரகாஷ் அவர்களை இனைத்துக்கொண்டு மஸ்த்தூர்களுக்கு  சங்கம் துவக்கி இரண்டாடுகாலம் சிறப்பாக  நடத்தினோம்  நிர்வாகத்தின்  பழிவாங்கும்போக்கு சங்கங்களின் ஆதரவின்மையினால் தொடரமுடியவில்லை  தாங்களும்  மஸ்த்தூரக வாழ்க்கையை தொடங்கி JE ஆக பணியை நிறைவு செய்கிரீர்கள் இந்த பணிகாலத்தில் வாழ்க்கை நிறைய அணுபவங்களையும்  படிப்பினையும் கற்றுக்கொடுத்திருக்கும்  நீங்கள் நீங்களாகவே இருங்கள் உங்கள் அயராத உழைப்பும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையை  தொடரட்டும்  ஓய்வுகாலம் பயனுள்ளதாக  அமையட்டும்  எல்லாம் வல்ல முருகப்பெருமான் அருளாசி யினால் நீள்ஆயுள் நிறைசெல்வம் உயர்புகழ் மெஞ்ஞானம் பெற்று பல்லாண்டு பல்லாண்டு  நலமுடன் வளமுடன்  குடும்பத்தினர்  அனைவருடனும் மகிழ்ச்சியாக வாழ  மீண்டும் என்குருநாதர்  எல்லாம் வல்ல முருகப்பெருமான்  திருவடியை பற்றி அவன்அருளை வேண்டுகிறேன்  வாழ்த்துகிறேன்  வாழியவே பல்லாண்டு பல்லாண்டு வாழியவே  வாழ்க நலம் சூழ்க நலம் சாமிநாதன்  மாவட்டசெயலாளர்  அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்கம் தஞ்சை 30 06 2021.

====================================================================



==========================================================

தஞ்சை மாவட்ட செயலர் தோழர் கிள்ளி வளவன் அவர்கள் பணி நிறைவு காலம் சிறப்பாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

சௌந்தரராஜன்
நாமக்கல்

======================================
தஞ்சை மாவட்ட செயலர் தோழர் கிள்ளி வளவன் அவர்கள் பணி நிறைவு காலம் சிறப்பாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

சௌந்தரராஜன்
நாமக்கல்
=========================================

 தோழர் கா. கிள்ளிவளவன், மாவட்ட செயலாளர் 

NFTE-BSNL, தஞ்சை மாவட்டம். 

இந்த தோழரின் வரலாற்றை விக்கிப்பீடியா மூலம் கூட பதிவிடலாம்.

நான் இவரோடு கூட பயணித்தவரை,

1.அன்பும், அக்கறையும், அரவணைப்பும் உள்ள தோழர். 

2.ஆடம்பரமும், ஆதிக்கத்தையும் விரும்பாத ஆற்றல் மிக்க தோழர். 

3.இயற்கை விவசாயத்தை தன் மூச்சாக கொண்ட தோழர். 

4.ஈடில்லா இழப்பை அடுத்தடுத்து சந்தித்த தோழர். 

5.உண்மையை,உயர்வை,உழைப்பை இவர் தன் கைவசம் வைத்து தவழ வைத்த தோழர். 

6.ஊனமுள்ள சம்பவத்தையும், நிகழ்வுகளையும், சொற்களையும் தகர்த்து எறிந்து தனக்கென்று ஒரு விதியை விதித்த தோழர். 

7.எண்ணத்தையும், உறுப்பினர் எண்ணிக்கையையும் தமிழக தொழிற்சங்க வரலாற்றில் பல மடங்கு அதிகரித்து தனக்கென ஒரு பாணியை வகுத்த தோழர். 

8.ஏறுபிடித்து ஏற்றம் கண்டும், தன்னை ஏறி நசுக்குவோரையும் கூட ஏணிப்படியில் ஏற வைத்து அழகு பார்த்த தோழர். 

9.ஐயத்தோடு யாரையும் பாராமல் தன்னோடு அழைத்து வந்து, வைத்து அவர்களையும் வளர விட்ட தோழர். 

10.ஒற்றுமையை உருவாக்கியும்,ஒவ்வாமை உள்ளோரையும் ஒருங்கிணைத்த தோழர். 

11.ஓடி ஓடி உழைக்கும் வர்க்கம் தன் கூட இருந்தா(ல்)லும் இல்லாவிட்டாலும் தான் ஓடி ஓடி வந்து செயலாற்றி வரலாறு படைத்த தோழர். 

12.ஔடதம் போன்று அறிவுரை வழங்கி உணர வைத்த தோழர். 

13.எஃகு போன்ற கூர்மை, மதிநுட்பம் கொண்டு சுமார் 30 வருடம் இலாகா பணி, தொழிற்சங்க பணி ஆற்றி எந்த தோழரும் குறைகூறா வண்ணம் செயல்பட்ட தோழர் 30.06.2021 அன்று இலாகா பணியை நிறைவு செய்கிறார். 

தோழருக்கு எனது வீர வணக்கத்தை சொல்லி எல்லாம் வல்ல இயற்கை வளங்களும் தோழரையும், குடும்பத்தாரையும் ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என வேண்டிக்கொள்ளுகிறேன். 🙏🙏🙏🙏🙏

P. சுந்தரராஜன், 

மாவட்ட துணைத் தலைவர், 

NFTE-BSNL, 

தஞ்சாவூர். 

=====================================================================

கிள்ளிக்கு பணிஓய்வு வாழ்த்துக்கள்!!!💐💐💐

மேலவாசல் பேப்பர் ஆலையில் தொடங்கி கர்ஜித்த குரல்!

மஸ்த்தூராய் உழைத்த கூடத்திற்கு

மாஸ் ஆன குரல் !

அதிகாரிகளின் ஆணவத்திற்கு அதிர் வெடியான குரல்!

காவேரி தண்ணீருக்கு ரோட்டில் கத்திய குரல்!

விவசாய கூலிக்கு கூவிட்ட குரல்!

மஸ்த்தூரின் நிலையான வேலைக்கு போரிட்ட குரல்!

கிள்ளியின் குரல் ஓய்வு அறியாது விண்ணிலும் மண்ணிலும் உம்குரல் ஒலிதிட வேண்டும்!

வாழ்க பல்லாண்டு!!!

அன்புடன் 

சேரன்குளம் A.நாகராஜன் TT MNG

==================================================================

கா. கிள்ளிவளவன் 

மாவட்ட செயலர் NFTE 

30/06/21ல் பணி ஓய்வு 

பெறுகிறார். நல்ல 

தொழிற்சங்கவாதி

எல்லோரிடமும் நன்மதிப்பை 

பெற்றவர். அவரின் ஓய்வு 

காலம் அமைதியாகவும் 

சந்தோஷமாகவும் அமைய

இறைவனை வேண்டுகிறேன்.

                   K. சண்முகசுந்தரம் 

       மாவட்ட துணை செயலர்  

                            NFTE.

===========================================================

இன்று பணி நிறைவு பெறும் தோழர் கிள்ளிவளவன் மா.செ.  NFTE  அவர்களின் பணி நிறைவு காலம் சிறக்க தணிப்பட்ட முறையிலும் நமது கிளையின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவண்

AMF .ஜெயசீலன்

கிளைச் செயலர்

ALBSNLPWA

பட்டுக்கோட்டை

==================================================================

தஞ்சை மாவட்டச்செயலர்..

தோழர் கிள்ளிவளவன்... அவர்கள்

இன்று 

இலாக்காப் பணியில் இருந்து 

பணிநிறைவு பெறுகின்றார்...

மற்றும் புதுவை மாவட்டச்செயலர்

தோழர். தங்கமணி இன்று இலாக்காப் பணியில் இருந்து பணிநிறைவு பெறுகின்றார். ... இவர்கள் உடைய பணி நிறைவு காலம் சிறக்க வாழ்த்துக்கள். 

NFTE விருதுநகர்  மாவட்டச்சங்கம்.

================================================





செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR