தினம் ஒரு கருத்து

தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும் நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம் தான் குற்றங்களுக்கு காரணம்...

Thursday, May 31, 2012

கால வரையற்ற வேலை நிறுத்தம்
அனைத்துச் சங்க அறைகூவல்


     28-05-2012 அன்று மாலை டெல்லியில் அனைத்துத் தொழிற்சங்கங்களின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.    அக் கூட்டத்தில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் நியாயமான கோரிக்கைகளை நிர்வாகம் உடன் தீர்த்து வைக்கக் கோரி கீழ்க்கண்டவாறு போராட்டத் திட்டங்களை வடிவமைத்துள்ளது.  இக் கூட்டத்தில் FNTO பங்கேற்கவில்லை.  

- 31/05/2012 அன்று கிளைகள் தோறும்  
                                         ஆர்ப்பாட்டம் நடத்துதல்.

- 06/06/2012 அன்று மாவட்ட 
          தலைமையகங்களில் பெருந்திரள் தர்ணா.

- 13/06/2012 அன்று முதல் கால வரையற்ற  
                       வேலை நிறுத்தம். கோரிக்கைகள்
1 78.2 சதவீத IDA  வை இணைத்திட வேண்டும்.

2 பறிக்கப்பட்ட மெடிக்கல் அலவன்ஸ்,LTC  ஆகியவற்றை மீட்பது. 

LTCசலுகையைப் பயன்படுத்தும்போது பெறப்பட்ட  லீவ்   
       என்கேஷ்மெண்ட்டை மீட்பது.

4 BSNLன்   நிதி ஆதாரத்தை மேம்படுத்த ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிதி உதவிகளை திரும்பப் பெறுவது.

BSNLக்கு விருப்பம் தராத ITS அதிகாரிகளை விடுவிப்பது.

         கிளைச் சங்கப் பொறுப்பாளர்கள், தோழர்கள் போராட்டத்தை வெற்றிகரமாக்க நடத்திட திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டுகிறோம்.

இவண், 
    எஸ். பிரின்ஸ்         டி. பன்னீர்செல்வம்,          டி. பக்கிரிசாமி
மாவட்டத் தலைவர்.  மாவட்டச் செயலர்.      மாவட்டப் பொருளர்.

Monday, May 28, 2012Saturday, May 26, 2012

கோவை மாவட்ட வலைதள முகவரி மாற்றம்!

கோவை மாவட்ட வலைதள முகவரி மாற்றம்!

கோவை மாவட்டச் சங்க வெப்சைட் முகவரி கீழ்க்கண்டவாறு
 மாற்றப்பட்டுள்ளது.  

NFTECOIMBATORE.BLOGSPOT.COM

    TTA தேர்வுக்குச் செல்லும் தோழர்களை வாழ்த்துகிறோம்!

Wednesday, May 16, 2012

இளைஞர் தினம். 17-05-2012 ( தோழர் ஜெகன் பிறந்த நாள் )

     நமது மாநிலச் சங்கத்தின் வழிகாட்டல் அடிப்படையில் தோழர் ஜெகனின் பிறந்த நாளை இளைஞர் தினமாக நாம்   கொண்டாடுகிறோம்.  ஜெகன் என்று சொல்லும்போது அந்த சொல் ஒரு மந்திரச் சொல்லாக கடந்த 2000 ஆம்  ஆண்டு   வரை   பெரும்பான்மைத் தோழர்களின்  உணர்வில் கலந்திருந்தது.   இன்றைக்கு அதை மீட்டு நமது இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதை  தலையாய கடமையாக உணர்கிறோம்.
      03-01-1992 அன்று கோவை பிரசிடென்சி ஹாலில் E 3 சங்கத்தின் 22 வது மாநில மாநாடு நடைபெற்றது.  அது தோழர் குப்தா, மோனிபோஸ், ஞானையா பங்கேற்ற மாநாடு.   அதில் தோழர் ஜெகன் பங்கேற்று துவக்க    உரையாற்றியதை தொகுத்து உங்களுக்கு தருகிறோம்.  

Sunday, May 13, 2012

சர்க்கரை நோயின் அறிகுறிகள்இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையில் உள்ள கணையம் (Pancreas) என்ற உறுப்புதான் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது.
ரத்தத்தில் சர்க்கரையின் (குளுகோஸ்) அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது இந்த இன்சுலின்தான். ஒருவேளை, இன்சுலின் சுரப்பது குறைந்துபோனாலோ அல்லது நின்றுபோனாலோ சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறார்கள்
சாதாரண நிலையில் இரத்ததில் குளுக்கோஸ் அளவு:
காலை உணவுக்கு முன் (வெறும் வயிற்றில்) 70-140 மிகி/டெசிலி இருக்கலாம்
உணவு உட்கொண்டபின் 100-140 மிகி/டெசிலி இருக்கலாம்
சர்க்கரை நோயின் அறிகுறிகள்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கீழ்கண்ட அறிகுறிகளை உணரலாம்
1.அதிகமான தாகம்
2.அதிக பசி
3.அடிக்கடி சிறு நீர் கழித்தல்
4.உடல் இளைத்தல்
5.உடல் பலகீனம் மற்றும் உடல் இளைப்பு
6.உடலில் காயம் குணமாக தாமதம் அல்லது நாள்படல்
7.கைகள் மற்றும் கால் பாதங்கள் மறுத்துப் போதல்
8.கண் பார்வை மங்குதல்
9.பிறப்புறுப்பில் அரிப்பு
சர்க்கரை நோய்க்கான காரணிகள்:
 • குடும்பத்தில் வேறு யாருக்காவது சர்க்கரை நோய் பாதித்திருந்தால்
 • அதிக உடல் எடை அல்லது உடல் பருமன்
 • உயர் இரத்த அழுத்தம்
 • மன உளைச்சல்
 • ஒரே இடத்திலேயே அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் சுறுசுறுப்பற்ற நிலை
 • ஆபத்துக்குள்ள மகப்பேறு காலங்கள் கொண்டவர்கள்
உதாரணமாக
 • தொடர்ந்து அல்லது அடிக்கடி கருச்சிதைவு உண்டாதல்
 • பிறவிக் குறைபாடுகள்
 • பிறக்கும் குழந்தையின் எடை 3.5 கிலோவிற்கும் அதிகமாக இருத்தல்
உணவு கட்டுப்பாடு
 1. சர்க்கரை நோய்க்கு முறையான உணவு கட்டுப்பாடு முக்கியமானதாகும்
 2. அரிசி சோறு மருத்துவரின் ஆலோசனைப்படி குறைந்த அளவு உட்கொள்ளலாம்
 3. இரத்தத்தில் கொழுப்பு உயருவதை தடுக்க செரிவு நிலை நிறைந்த(Saturated) கொழுப்பு உணவு வகைகளை குறைக்க வேண்டும்
 4. பல வகையான நிரை செறிவற்ற(Polyunsaturated) எண்ணெய்களான சபோலா அல்லது சனோலா போன்றவை சிறந்தது
 5. நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் போன்ற ஒரே வகையான நிரை செறிவற்ற(Mono unsaturated) தாவர வகை எண்ணெய்களை பயன்படுத்தலாம்
 6. அனைத்து வகையான தானியங்கள்,பயறு வகைகள் குறிப்பாக கடலை பருப்பு,உளுத்தம் பயறு,பச்சைப்பயறு மற்றும் பச்சைக் காய்கறிகள்கீரைகள் சேர்த்துக்கொள்ளலாம்
 7. நார்சத்துமிக்க வெந்தய விதையை முளைகட்டியதாகவோ அல்லது பொடியாகவோ உட்கொள்ளலாம்
 8. காய்கறி வகைகளான பூசணிக்காய்,பீன்ஸ்,பாகற்காய்,சுரைக்காய்,கத்தரிக்காய்,தளிர்கோஸ் கீரை வகைகள்(brussels sprouts),முட்டைக்கோஸ்,வெள்ளரிக்காய்,காலிஃபிளவர்,சவ்சவ்,கொத்தவரை,கொத்தமல்லி இலைகள்,காராமணி,குடைமிளகாய்,முருங்கைக்காய்,
  இஞ்சி,கீரை வகைகள்,நூக்கல்,கோவக்காய்,வெண்டைக்காய்,புதினா,வெங்காயம்,பப்பாளிக்காய்,வாழைப்பூ,வாழைத்தண்டு,பீர்க்கங்காய்,புடலங்காய்,தக்காளி,வெள்ளை முள்ளங்கி போன்றவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்
 9. வெண்ணெய் நீக்கப்பட்ட மோர்,சர்க்கரை சேர்க்கப்படாத எலுமிச்சை மற்றும் தக்காளிச்சாறு,மிளகு ரசம்,வெள்ளரி,வெங்காயம்
  வெள்ளை முள்ளங்கி,குடை மிளகாய் ஆகியவற்றால் செய்யப்பட்ட காய்கறி சாலட் உடலுக்கு நல்லதாகும்.
 10. உங்கள் மருத்துவர் அல்லது உணவு கட்டுபாட்டு நிபுணரின் அலோசனையின் பேரில் இரத்த சர்க்கரை தகுந்த கட்டுபாட்டில் இருக்கும் போது மட்டுமே ஆப்பிள்,ஆரஞ்சு,சாத்துக்குடி,பப்பாளிப்பழம்,கொய்யா,பேரிக்காய்,முலாம்பழம் மற்றும் தர்பூசணி போன்றவைகளை உட்கொள்ளலாம்.
 11. உணவை இடைவெளி விட்டு சிறிதுசிறிதாக பிரித்து உண்ண வேண்டும்
 12. உணவை தள்ளிப்போடுதல் அல்லது விரதமிருத்தல் உடலுக்கு நல்லதல்ல
 13. கேரட்,பீட் ருட்,பட்டாணி மற்றும் டபுள் பீன்ஸ் ஆகியவற்றை ஓரளவே பயன்படுத்த வேண்டும்
 14. உருளை,சேனை,மரவள்ளி மற்றும் சேப்பங்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை தவிர்ப்பது நல்லது
 15. உடல் பருமனுள்ளவர்கள் சர்க்கரை,தேன்,குளுக்கோஸ்,ஜாம்,வெல்லம்,இனிப்புகள்,கேக் வகைகள்,மாவிலான அப்பவகைகள்,இள நீர்,பன்னீர் சோடா,குளிர்பானங்கள்,வாழைப்பழம்,மாம்பாழம்,பலாப்பழம்,சீதாப்பழம் மற்றும் உலர்ந்த பழங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

Friday, May 11, 2012

நல்லதோர் வினை செய்த நாற்பெரும் விழா.

நல்லதோர் வினை  செய்த  நாற்பெரும்  விழா.

குடந்தை மாவட்ட மாநாடு 
மாநிலச் செயற்குழு 
சேவை மேம்பாட்டுக் கருத்தரங்கம்.
செயல்வீரன் சேதுவுக்கு பாராட்டு.

Tuesday, May 1, 2012


election results

Floating Window .......

ELECTION

ELECTION

F

Blog Archive