தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, January 29, 2012

Saturday, January 28, 2012

சொசைட்டி செய்திகள்

சொசைட்டி செய்திகள் 

     கடந்த 24 - 01 - 2012 அன்று  87 ஆவது ஆண்டு RGB க்களின் மகாசபைக் கூட்டம் சென்னை அசோகா ஹோட்டலில்  தலைவர் திரு. வீரராகவன் தலைமையில் நடைபெற்றது.     197 RGB க்கள் பங்களிப்புடன் இரவு 9 மணிவரை நடைபெற்ற கூட்டத்தில்  எவ்விதத் தடையுமின்றி உறுப்பினர்களால் விவாதங்கள் நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
    
எடுக்கப்பட்ட முடிவுகள்.
   1. நிலம் பெறுவதற்கான விருப்பக் கடிதத்தை  LOI  Letter of Interest )  25-01-2012 துவங்கி 29-02-2012 க்குள்  ரூபாய் 10 செலுத்தி   சொசைட்டியில் கொடுத்து ஒப்புகை ( Acknowledgment ) பெற்றுக்கொள்ளவேண்டும். சொசைட்டி வெப்சைட்டில் கடிதத்தின் மாதிரி கொடுக்கப்பட்டுள்ளது. CMDA முடிவுப்படி விலை, அளவு எல்லாம் தெரிய 2 மாதங்களுக்கு மேல் ஆகும்.   அதன் பிறகு பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கப்படும். பின்னர் விருப்பம் தெரிவித்தவர்களிடமிருந்து, பிரிக்கப்படும் பிளாட்டுக்கு ஏற்ப நபர்கள்  நீதிபதி முன்னிலையில்  தேர்வு செய்யப்படுவர்.  
     2. சேலம் மற்றும் மதுரையில் சொசைட்டி கிளை திறக்கப்படுகிறது. சேலத்தில் 24-02-2012 ல் துவங்கப்படுகிறது.  
      3. சொசைட்டி வலைத்தளம் 25-01-2012 முதல் துவங்கப்படுகிறது. இனி உறுப்பினர் பற்றிய எல்லா விபரங்களையும் நாமே தெரிந்து கொள்ளலாம். 
     4. DEFAULTER PERIOD  3 மாதங்களுக்கு மேல் இருந்தால்  2 %  ( ரூபாய் 30000 வரை) PENALTY கட்டணமாக  செலுத்தி லோன் பெற்றுக்கொள்ளலாம். 
     5. ஈமச் சடங்குக்கான கடன்  தொகை ரூபாய் 5000/-  இன்று  முதல் 10000/- ஆக
உயர்த்தப்படுகிறது.      
  6. காலியாக உள்ள இயக்குனர்கள்  BY LAW படி   தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவர். 
     7. தற்போதுள்ள நிலைமையில் வட்டி குறைக்க வாய்ப்பில்லை. அதேபோல் TF க்கான வட்டி உயர்த்துவது பற்றி வரும் ஏப்ரலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும். 
     8. வரும் பிப்ரவரி சம்பளத்தில் டிவிடன்ட் வழங்கப்படும். 
  9.  MULTI SOCIETY என்ற நிலைமையை உருவாக்க நாடு முழுவதும் கிளைகளை  துவக்கினால் ஒழிய குறைந்த வட்டிக்கு நம்மால் கடன் பெற முடியாது. எனவே, அதைச் செயல்படுத்தி கடனுக்கான வட்டியை குறைப்போம். அதே நேரத்தில் உறுப்பினர்களின் பயம் கலந்த சந்தேகங்களை நாங்கள் முழுமையாக புரிந்து கொண்டுள்ளோம்.  அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுப்போம் என்ற உறுதிமொழியை தலைவர் கொடுத்துள்ளார்.
     10 . இம்மாதத்திலிருந்து  குடும்ப நல நிதி ரூபாய் 600 ஆகவும், காப்பீட்டுத் தொகை ரூபாய் 3 லட்சமாகவும் உயர்த்தப்படுகிறது.
     11 . தானே புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சொசைட்டி லாபத்தில் 1 % அனுப்பப்படும்.
     12 . ஷேர் கேபிடல் தொகை இனி 10 % லிருந்து 5 % ஆகக் குறைக்கப்படுகிறது. விரைவில் அமுலுக்கு வரும். ஏற்க்கனவே பிடித்தம் செய்யப்பட்ட தொகையும் அட்ஜஸ்ட் செய்யப்படும்.

நிலம் பற்றி:  தனி அதிகாரி நிர்வாகத்தில் இருந்தபோது ரூபாய் 16 கோடிக்கு  வாங்கப்பட்ட 95.5  ஏக்கர் நிலத்தின் மதிப்பு இன்றைக்கு  வட்டி சேர்த்து  ரூபாய் 30 கோடியாக மாறியிருக்கிறது.      
     இந்த 95 .5 ஏக்கரில் 7 .5 ஏக்கர் நிலம் 4 வழிப் பாதைக்காக கொடுக்கப்பட்டு இழப்பீடாக ரூபாய் 1244015 /- பெறப்பட்டுள்ளது.
     மீதி உள்ள 88 .2 ஏக்கரில் CMDA வழிகாட்டுதல்படி 10 % பொதுப் பயன்பாட்டுக்காகவும் ( பார்க் போன்றவைகளுக்காக),
10 % கமர்சியல் / இண்டஸ்ட்டரியல்  பயன்பாட்டுக்கும்ஒதுக்கப்படுகிறது.
10 % பொருளாதார நிலையில் தாழ்ந்த பிரிவுக்கு ( Economically Weaker Section)                ஒதுக்கப்படுகிறது.  680 sq. ft. என்ற அளவில் ஒதுக்கப்பட வேண்டும்.
    மற்றவை 1200, 1500, 1800, 2400 sq. ft. என்கின்ற அளவில்  நிலம் பிரிக்கப்படும்.

வலைத்தளம் பற்றி: 27-01-2012 முதல் துவங்கப்பட்ட நமது வெப்சைட்டின் முகவரி: WWW.BSNLSOCIETY.COM    இதில் நுழைவது எப்படி?
MEMBER  >    MEMBER  LOGIN >  BSNL HR ...DOB ... கொடுத்து LOGIN செய்க. 

              மேலும் விபரங்களுக்கு என்னை தொடர்பு கொள்க.

வாழ்த்துக்களுடன்...
எஸ். சிவசிதம்பரம்,
RGB
பட்டுக்கோட்டை.

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR