தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, April 21, 2013

 நன்றி தோழர்களே !

தேர்தல் பணிகள், பிரசாரங்கள் கடந்த 2 மாதங்களாக 
சித்திரைத் திருவிழா போல்  சிறப்பாக நடந்தேறியிருக்கிறது.
கடினமான உழைப்பினை, நிறைய நிதியினை 
பல தலைவர்களும், தோழர்களும் தந்திருக்கிறார்கள்.
தனது வீட்டு நிகழ்ச்சியை எல்லோரும் பாராட்டும்  விதத்தில் 
நடத்தி முடிக்க  எப்படிஎல்லாம்  கண்ணும் கருத்துமாக 
உழைப்பார்களோ அதைப் போன்றும் உழைத்திருக்கிறார்கள்.   
இவர்களுக்கெல்லாம் ஒற்றை வரியில் நன்றி 
என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.

தேர்தல் காலத்தில் நாம் அளித்த வாக்குறுதிகளை 
முழுமையாக நிறைவேற்ற 
கடுமையாக பாடுபடுவோம், போராடுவோம் 
என்பதுதான் உழைத்தவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றி! 

அகில இந்திய அளவில் 
BSNLEU  99,380 ( 48.6 % )
வாக்குகள்  பெற்றிருக்கிறது.
நமது  ( NFTE - BSNL ) 61,915 ( 30.28 % )
வாக்குகள் பெற்றிருக்கிறது.
FNTO 14,088 ( 6.89 ) வாக்குகள் பெற்றிருக்கிறது.
 
தமிழகத்தில் 
 NFTE - BSNL  6922 வாக்குகள் பெற்றிருக்கிறது.
BSNLEU  6178 வாக்குகள் பெற்றிருக்கிறது.
FNTO  1217 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. 

புதிய அங்கீகார விதிகளின்படி 
51 %  வாக்குகளைப் பெற்ற
 முதன்மைச் சங்கம் என்று எதுவும் வரவில்லை.
சம உரிமையுள்ள 
நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட 
தகுதியுள்ள சங்கமாக 
BSNLEU  -  NFTE  சங்கங்கள் 
வாய்ப்பைப் பெற்றிருக்கிறது.
7 % க்கு குறைவாக வாக்குகள் பெற்ற FNTO  வுக்கு 
அந்த வாய்ப்பு  கிட்டவில்லை.

அகில இந்திய, மாநில, மாவட்ட மட்டங்களில் 
அமைக்கப்படும் JCM ல் 
BSNLEU - NFTE க்கு முறையே 
9 : 5 என்ற விகிதத்தில்
 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

வெற்றி பெற்ற அனைவருமே புத்திசாலியில்லை!
புத்தியுள்ள அனைவருமே வெற்றிபெற்றதில்லை! 
என்ற பாடல் வரிகளும், 
என்னை  இன்னுமா நம்புறாங்க என்ற நகைச்சுவை வரிகளும் 
நினைவுக்கு வந்தாலும் அவையெல்லாம்
 இனி கவைக்குதவாது என்பதை உணர்வோம். 

தேர்தல் கால சாடல்கள், பேச்சுக்கள், விமர்சனங்கள் 
தேர்தலோடு போகட்டும்.   இனி தொடர வேண்டாம். 
பேசினால் பேசலாம், தாக்கினால் தாக்கலாம்.   
ஆனால், பேசவோ, தாக்கவோ தூண்ட வேண்டாம். சங்கத்தில் ஒற்றுமை, சங்கங்களுக்குள் ஒற்றுமை 
என்பதே இன்றைய தேவை 
என்பதை உணர்ந்து செயல்படுவோம்!

   
இரு வேறு கருத்துக்கள் இருந்த போதும்  
ஏதாவது ஒரு புள்ளியில் சந்திக்க முயல வேண்டும். 
NEPP, போனஸ், 78.2 போன்ற இன்னும் பல கோரிக்கைகளில் முன்னேற்றம் காண நிச்சயம் மாற்றுக் கருத்துக்கள் 
இரு சங்கத்துக்கும் உண்டு. 
அவைகள்  JCM  க்கு வெளியில் பேசி, விவாதித்து 
ஒத்த கருத்தோடு சென்று நிர்வாகத்தை சந்தித்தால் 
வரப்போகும் மூன்றாண்டும்  முன்னேற்றமாண்டாகும் !

நன்றி தோழர்களே!

அன்புடன், 
எஸ்.  சிவசிதம்பரம்.
பட்டுக்கோட்டை.






No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR