தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, June 17, 2013

திருச்சியில் விழாவாம் அழைக்கிறது கோவை

தோழர் C .K .மதிவாணன் அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா 
திருச்சி மலைக்கோட்டை மாநகரிலே !! 
ஜூலை 18 மதியம் !!   வாரீர் !! வாரீர் !!!
திருச்சியில் விழாவாம் அழைக்கிறது கோவை .
பணி ஓய்வு பாராட்டுவிழா சிறக்க வாழ்த்துக்கள்.ஆனால் எமது கேள்வி/சந்தேகம் என்னவென்றால் -இந்த விழாவிற்கான முடிவு எங்கே எடுக்கப்பட்டது? திருச்சியும்,கோவையும் தமிழ் மாநில சங்கத்தின் அங்கமா? இல்லை சென்னை தொலைபேசியின் அங்கமா ?
தோழர் C.K.M  அவர்களுக்கு சென்னை தொலைபேசியில் விழா -தமிழ் மாநில சங்கத்திற்கு அழைப்பில்லை -தேவையுமில்லை .இதற்கு முன்பாக எத்தனையோ தலைவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர் .தோழர் ஜெகன் ,முத்தியாலு ,R.K ,மாலி ,தமிழ்மணி போன்ற தன்னிகரில்லா தலைவர்கள சங்கத்தின் மாநில செயலர் மற்றும் சம்மேளன பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார்கள் .அவர்கள் அனைவருக்கும் தமிழ் மாநில சங்கத்தின் சார்பில் தான் விழா எடுக்கப்பட்டது .எந்த மாநிலத்தின் பொறுப்பில் உள்ளனரோ அந்த மாநில சங்கம் விழா எடுப்பதுதான் மரபு.போகட்டும் ,தோழர் C.K.M அவர்கள் அகில இந்திய துணை பொதுச்செயலர் என்பதால் இந்த விழா எனில் -அதனை தமிழ் மாநில சங்கம் தான் முடிவு செய்திட வேண்டும் .மாவட்ட சங்கங்கள் அல்ல .எல்லோராலும் கொண்டாடப்பட வேண்டிய விழா எனில் அதனை குழு விழாவாக ஆக்க முயற்சிக்கிறது திருச்சியும்/கோவையும் .
கோவை வலைதள வசனத்தை உங்களின் முடிவிற்கே விட்டு விடுகிறேன்.
வயிற்றெரிச்சலில் சிலர் தம் 
வழக்கம்போல் வதந்தியை பரப்புகிறார்  
60 தங்க காசுகளை தரப் போகிறார்கள் என்று !!

" தமிழக ஆட்சி மாற்றத்திற்கே காரணமானவர் "
என்று வசிஷ்டை வாயாலேயே 
பேரும் புகழும் பெற்றவர் !
அதற்கு ஈடாக கொடுத்த  
  எம்.எல்.ஏ பதவியை மறுதலித்தவர்.

                                        "இது  மணிவிழாவா ? அல்ல 
                                          தனி விழாவா ? அல்ல 
                                          ஒரு அணியின்  விழாவா ?"
   என்கிற ஐயம் தோழர்கள் மத்தியில்  எழுந்துள்ளது .
தலைவர் C.K.M அவர்களுக்கும் ,அவர்தம் குடும்பத்திற்கும் எமது வாழ்த்துக்கள் 


நன்றி,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL ,
THANJAVUR .

 

1 comment:

  1. குரூப் விழா என்றோர் ... இப்பொழுது என்ன சொல்கிறார்கள்? இப்படி எல்லாம் உங்களை கேள்வி கேட்க வைத்து ... சூடான கட்டுரை எழுத வைத்தது எது வென்றால்... கட்டுப்பாடு இல்லா... வரம்பு மீறும்... தரம் இல்லா இணைய விமர்சனம் தான் என்பதை... நான் அறிவேன்... தமிழகமும் அறியும்.
    வாழ்க வெல்க !
    ம.விஜய்-குடந்தை

    ReplyDelete

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR