தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, July 22, 2013

உலக கடிதம் எழுதும் தினம் 
 நலம். நலமறிய ஆவல்

அ. லைலாபானு 
NFTE  தமிழ் மாநில மகளிர் ஒருங்கிணைப்பாளர், தஞ்சை.  

பல்கி பெருகி வரும் 
  தொழில் நுட்ப வளர்ச்சி/புரட்சி, 
  கணினி பயன்பாடு,
  எண்ணிலடங்கா குறுந்தகவல்கள்,
  இ - மெயில்,
  சமுதாய வலைதளங்களில் கருத்து பரிமாற்றம்,
  அலைபேசிகளின்  ஆக்கிரமிப்பால் கையளவில் சுருங்கிவிட்ட உலகம், 
  பாரம்பரியமான தந்தி சேவையின் மூடு விழா, மற்றும் 
  அன்றாட கடமைகளுக்கான ஓட்டம் 
என்ற பரபரப்பான சூழலில் " கடிதம் எழுதுதல் " என்ற உன்னதமான பயன்பாட்டை நாம் மறந்தே விட்டோம்!
       
         எழுத்து ஓர் வலிமையான ஆயுதம்.   இயல், இசை, நாடகம், கலை, இலக்கியம், குடும்ப உறவு, நண்பர்கள், அலுவலகம், அரசியல், சமூகம், சமயம் என எல்லா மட்டத்திலும் கோலோச்சிய அற்புதமான எழுத்தாற்றல் இன்று அரிதாகிவிட்டது.

       மேகம் விடுதூது, புறா விடுதூது, பின்னர் கடிதம் எழுதுதல் என்ற பரிணாம வளர்ச்சியில் புரட்சிகர சிந்தனையாலும், எழுத்தாலும் இவ்வுலகை மிடுக்குடன் நடத்தியவர்கள் பலர். 

1.   முன்னாள் பிரதமர் நேரு அவர்கள், சிறையில் இருந்து தன்  மகள் இந்திரா பிரியதர்ஷனிக்கு எழுதிய கடிதங்கள்தான் பின்னாளில் அவரின் அரசியல் பிரவேசத்திற்கும்,  பாரத பிரதமர் ஆவதற்கும் வழிகாட்டியது. இந்தக் கடிதங்களின் தொகுப்பே   "Glimpses of World History " என்ற நூலாக வெளிவந்தது.  

2.    மறைந்த திரு. அண்ணாதுரை அவர்கள், ' தம்பிக்கு ' என்று எழுதிய கடிதங்களும், அதைப்போலவே இன்றும் திரு. கருணாநிதி அவர்கள் எழுதும் 'உடன்பிறப்புக்கு' என்ற கடிதங்களும் சிறப்பானவை.

3. தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசனாரின் ' அன்னைக்கு', 'தம்பிக்கு', 'தங்கைக்கு', 'நண்பர்க்கு' என்று எழுதிய கடிதங்கள்  தமிழகத்தின் பண்பாட்டை பறைசாற்றும்படி அமைந்தவை. 

4. அசத்தலான எழுத்தாற்றல், பேச்சாற்றல், தலைமைப் பண்பு, துரித செயல்பாடு என்ற பன்முகத் திறன் நிறைந்த தலைவர்கள் உள்ள நம்  NFTE சங்கத்தில் இன்றைய நமது தமிழ் மாநிலச் செயலர் தோழர். பட்டாபிராமன் அவர்கள் ஓர் அற்புத சிற்பி.

      அவரின் அயராத உழைப்பால், எழுத்தால் நமது  நடந்து முடிந்த 6 வது ஊழியர் சரிபார்ப்பு தேர்தலில், NFTE தமிழ் மாநிலச் சங்கம் வாகை சூடியதோடு, 2வது  சங்க அங்கீகாரமும், கவுன்சில்களில் பங்கேற்கும் வாய்ப்பும் பெற்றுள்ளோம்.

      கிடைத்துள்ள அறிய வாய்ப்பை நழுவ விடாது, சிரத்தையோடு செயல்பட்டு, அனைவரின் ஒத்துழைப்போடு,

BSNL ஐ பாதுகாத்தல்,
தேசத்தைக் காத்தல் 

என்ற உன்னத கடமைகளுடன் பீடு நடை போடுவோம்.

ஏற்றமிகு எழுத்துக்களைப்  போற்றுவோம்!
வாருங்கள் பெண்களே! 
வளம் சேர்ப்போம் நமது பணியாலும்!! 

நல்வாழ்த்துக்களுடன்,
அ. லைலாபானு 
தமிழ் மாநில மகளிர் ஒருங்கிணைப்பாளர், 
NFTE, தஞ்சை.  

2 comments:

  1. வணக்கம் தோழியரே..
    வருடத்திற்கொருமுறை மட்டும் எழுதாமல்
    வருடம் முழுவதும் எழுதுங்கள்
    வசந்தம் பரவட்டும்..
    வறட்சி நீங்கட்டும் ..

    வாழ்த்துக்கள்
    காரைக்குடி மாவட்டசங்கம்

    ReplyDelete
  2. உலக கடித நாளில் .... சக தோழியர்க்கு கடிதம் எழுதி ... சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள் ... தோழியர்கள் இணையத்தில் எழுத வேண்டும் ...தொடரட்டும் தங்கள் பணி...
    விஜய் - குடந்தை

    ReplyDelete

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR