தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, September 15, 2013

மந்திரிகள் குழு முடிவுகள்

மந்திரிகள் குழு முடிவுகள் 

12/09/2013 அன்று BSNL/MTNL மறுசீரமைப்புக்காக கூடிய 
மந்திரிகள் குழு எடுத்துள்ள  முடிவுகள் .
 
விருப்ப ஓய்வு, BSNL/MTNL வளர்ச்சிக்கான கருவிகள் வாங்குதல், அரசுத்துறைகள்  BSNL/MTNL சேவையை பயன்படுத்துதல், 
DOT சொத்துக்களை BSNLக்கு மாற்றுதல் 
போன்ற  முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படவில்லை. 

BWA (Broadband Wireless Access) அலைக்கற்றை கட்டணமாக  BSNL/MTNL  நிறுவனங்கள் செலுத்திய 11,000 கோடி தொகையைத்திருப்பி அளிப்பது.
இதில் BSNLன் பங்கு 6725 கோடியாகும். 
MTNL செலுத்தியது 5700 கோடியாகும்.

MTNL ஊழியர்களுக்கு ஒய்வூதியம் அளிப்பது. 
  இதற்கான ஆண்டு ஓய்வூதியச்செலவு  570 கோடியாகும். இதில் 170 கோடியை MTNL செலுத்தும். மீதியை அரசே ஏற்றுக்கொள்ளும். 

மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்ற பின்பு மேற்கண்டவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும்,  மேலே கண்ட முடிவுகள் மூலம் BSNL/MTNL நிறுவனங்கள் லாபம் நோக்கி செல்ல முடியும் எனவும்  இலாக்கா அமைச்சர் கூறியுள்ளார். 


கே.நடராஜன் MA ,TTA -PSM ,
ACS ,NFTE -BSNL ,
தஞ்சாவூர் .




No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR