தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, March 9, 2014


TMTCLU 
தமிழ் மாநில ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் 
தஞ்சை மாவட்டம்.

அறிவிப்பு 

அருமைத் தோழர்களே! தோழியர்களே!
          வணக்கம்.    நமது மாவட்ட மாநாடு வருகிற ஏப்ரல் இரண்டாவது  வாரத்தில் நடைபெறவிருக்கிறது.   இம் மாநாட்டை சிறப்பாக நடத்திக் கொடுக்க திருத்துறைபூண்டி கோட்டம்  ஒப்புக் கொண்டுள்ளது.   கிளை தோழர்கள் அனைவரும் மாநாட்டு நிதியாக ரூபாய் 100 ஐ மாநாட்டு வரவேற்புக்குழுத்  தலைவர் தோழர்.கலைச்செல்வன் TM/TTP  அவர்களிடம் உடன் அனுப்பிட வேண்டுகிறோம்.  உங்களது நிதி உடன் வந்து சேர்வது மாநாட்டுப் பணிகளை துவக்கிட உதவியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

          மாநாட்டில்  தலைவர்கள் தமிழ்மணி, RK, பட்டாபி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.  மாநாட்டு அழைப்பிதழ் வெகு விரைவில் உங்கள் கைகளில் தவழும். 

       மாதம் ரூபாய் 150/- ல் துவங்கிய நமது சம்பளம் இன்றைக்கு 5400/- வரை உயர்வு பெற்றுள்ளது.  இதுவல்லாமல் நமது கணக்கில் சேர வேண்டிய  EPF ம்  முறைப் படுத்தப்பட்டுள்ளது. 

      பொங்கல் போனஸ், தீபாவளி போனஸ் என்று ஆண்டுக்கு ரூபாய் 2500 வரை பெற்று வருகிறோம்.  அவ்வப்போது DA உயர்வினையும் பெற்று வருகிறோம்.  

       ஆயினும் இன்னும் சில சலுகைகளை  நமது மாவட்ட நிர்வாகத்திடம் நாம் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் உள்ளோம். 

     ஒப்பந்த ஊழியருக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூபாய் 10000/- அளிக்க வேண்டும் என்ற நமது கோரிக்கையும்  நிலுவையில் உள்ளது. 

       மாநாட்டில்  வருகை தரும் உங்களின் உற்சாகமான பங்களிப்பால் இன்னும் பல கோரிக்கைகளை நம்மால் உருவாக்கவும் வெல்லவும் முடியும் என்று நம்புகிறோம். 

                  வாழ்த்துக்கள் தோழர்களே!!

தோழமையுடன்,
கலைச்செல்வன், தலைவர்.  கிள்ளிவளவன், செயலர்,
சிவசிதம்பரம், பொருளர்,
தஞ்சை மாவட்டம். 

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR