தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, July 17, 2015

வரலாற்றில் இன்று - 2004, ஜூலை 16 ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். இறந்த குழந்தைகள் அனைவரும் 4 வயதிலிருந்து 11 வயதுக்குட்பட்டவர்களாவர். பள்ளியின் கீழ்தளத்தில் மதிய உணவு சமைப்பதற்காக அடுக்கிவைக்கப்பட்டிருந்த கீற்று ஓலைகள் அருகில் யாருமில்லாத தருணத்தில் தீப்பிடித்து பள்ளிக் கட்டடம் முழுவதும் மளமளவென்று தீ பரவியது. ஆசிரியர்கள் அனைவரும் முதலில் வெளியே ஓடித் தப்பித்தனர். கூரை வேயப்பட்ட மாடி வகுப்பறைகளில் இருந்த நூற்றுக்கணக்கான சிறு குழந்தைகள் அனைவரும் குறுகலான படிக்கட்டில் ஒரே சமயத்தில் இறங்கி வெளியேற முடியாமையால் அவர்களில் பெரும்பாலானோர் தீயில் கருகி பரிதாமாக உயிரிழந்தனர். பள்ளியின் கேட்டினை அடைத்துவிட்டு வாயிற்காப்பாளர் தேநீர் அருந்த போய்விட்டபடியால் அனைவரும் விரைந்து வெளியேற முடியாத நிலை எற்பட்டது. கும்பகோணத்தில் ஒவ்வொரு தெருவிலும் இரண்டு கோயில்கள் உண்டு. அனைத்து கோயில்களிலும் சேர்த்து நூற்றுக் கணக்கான தெய்வங்கள் அந்த வேளையில் கும்பகோணத்தில் இருந்தபோதிலும் தீயில் கருகி நூற்றுக்கணக்கான குழந்தைகள் கூக்குரலிட்டு கதறிய ஒலி ஒரு தெய்வத்தின் காதிலும் விழவில்லை என்பது பரிதாபத்துக்குரியது.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR