தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, November 19, 2017


 கூட்ட நிகழ்வுகள்:

18-11-2017 மாலை 4 மணிக்கு நடைபெற்ற கூட்டத்தில் 
40 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
NFTE மாவட்டச் செயலர் தோழர். K. கிள்ளிவளவன்  பல்வேறு கேள்விகளுக்கு சிறப்பான விளக்கவுரையைத் தந்தார்.மறைந்த பெருமகளூர் தோழர் பழனிவேல் குடும்ப நிவாரண நிதிக்கு மன்னை கிளையின் சார்பில் ரூபாய் 2000 வழங்கப்பட்டது.  
அதை தோழர். நாடிமுத்து பெற்றுக் கொள்கிறார்.


Friday, November 17, 201718-11-2017 சனி மாலை 4 மணி.
இடம்:
ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கக் கட்டிடம்,
நகராட்சி பின்புறம், திருத்துறைப்பூண்டி.

தலைமை:
தோழர். K. தட்சிணாமூர்த்தி  கி.த NFTE - TTP

முன்னிலை:
தோழர். P. மதியழகன்  கி.த NFTE - MTU & RGB 
தோழர். M. நாகரெத்தினம் கி.த NFTE - VRM

வரவேற்புரை:
தோழர். M. கிருஷ்ணசாமி கி.செ TMTCLU - TTP

வாழ்த்துரை:
தோழர் D. கலைச்செல்வன் அவர்கள்
TMTCLU மாவட்டச் செயலர், தஞ்சை.
தோழர். எஸ். சிவசங்கரன், மாநில துணை செயலர், TMTCLU 
தோழர். R.K. ராஜேந்திரன் மாவட்ட பொருளர், TMTCLU 
தோழர். C. நாடிமுத்து மாவட்ட தலைவர், TMTCLU 

சிறப்புரை:
தோழர். கே. கிள்ளிவளவன் அவர்கள் 
NFTE, தஞ்சாவூர்.

நன்றியுரை:
தோழர். S. கலைச்செல்வன், கி.செ  NFTE - TTP 


இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு 
இடும்பை படாஅ தவர்.
துன்பம் வந்த போது அதற்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.

Wednesday, November 15, 2017


                   17-11-2017

REGULAR: 220   =    220
                      550   =    575
                    1100   =  1200 

FRESH:   nil
      

=============================================


         
           BEST PLANS
           BEST RATE CUTTER [STV]
                BEST DATA

==========================================
PLAN 429:     90 நாட்கள்.
                          அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                          தினசரி 1 GB டேட்டா.
                          லோக்கல், STD தமிழ்நாடு முழுமையும். 
                          ரோமிங் கிடையாது.
SMS KEYWORD: PLAN DIGITALINDIA429  TO  123  Rs. 364/- மட்டும்.  
==========================================
   
PV 485:          90 நாட்கள்.
                                    அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                          தினசரி 1 GB டேட்டா.
                          லோக்கல், STD இந்தியா  முழுமையும். 
                          ரோமிங் உண்டு.
SMS KEYWORD: PLAN BSNL485  TO  123  Rs. 412/- மட்டும். 

===========================================

PV 186:           28 நாட்கள். 
                        அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                          28 நாட்களுக்கும் 1 GB டேட்டா.
                          லோக்கல், STD தமிழ்நாடு முழுமையும். 
                          ரோமிங் கிடையாது.
=========================================
COMBO STV 187: 28 நாட்கள் 
                             அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                             28 நாட்களுக்கும் 1 GB டேட்டா.
                             லோக்கல், STD தமிழ்நாடு முழுமையும். 
                             ரோமிங் உண்டு.   
                             காலர் ட்யூன் இலவசம்.
=========================================

STV 333             : 90 நாட்கள்  -  டேட்டா மட்டும் 
=========================================


STV 339            :    28 நாட்கள் 
                               BSNL மட்டும் இலவசம்.
                               மற்றவை தினசரி 25 நிமிடம் மட்டும் இலவசம்.
                               அதற்கு மேல் நிமிடத்திற்கு 25 பைசா.
                               தினசரி 3 GB டேட்டா 
==========================================

STV 349           :    28 நாட்கள் 
                              அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                              தினசரி 2 GB டேட்டா

==========================================

STV 395           :    71 நாட்கள் 
                              BSNL 3000 நிமிடம் இலவசம் 
                              மற்றவை 1800 நிமிடம் இலவசம் 
                              அதற்கு மேல் நிமிடத்திற்கு 20 பைசா.
                              தினசரி 2 GB டேட்டா

=============================================
தொடரும்.........                              கலந்தாய்வுக் கூட்டம்


All unions and Associations of BSNL
சார்பில் 14/11/2017 அன்று NFTE அலுவலகத்தில் SNEA மாநிலச்செயலர் தோழர் ராஜசேகர் அவர்கள் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 
கூட்டத்தில் NFTE,BSNLEU, AIBSNLEA,SNEA, AIBSNLOA,TEPU, SEWA,FNTO,BTEU, STR,  (PEWA) சங்கத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.     


 மனிதச்  சங்கிலி இயக்கத்தை 
23/11/2017 அன்று மிக சக்தியோடு நடத்துவது, 30/11/2017 க்குள் பாராளுமன்ற உறுப்பினரிடம் மனு கொடுத்தல், 
12/13- Dec 2017 ல்    2 நாள் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடத்துவது 
என்றும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. வேலைநிறுத்த விளக்கக்கூட்டம் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் நடத்திட வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது.

Tuesday, November 14, 2017


  மனிதச் சங்கிலிப் போராட்டம்      23-11-2017 க்கு மாற்றப்பட்டுள்ளது.
முன்னிலும் முனைப்பாக சக்தி மிக்கதாக நடத்திக் காட்டுவோம்!

டைரக்டர் [ HR ] திருமதி சுஜாதா ராய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

கூட்ட துவக்கத்தில் அவர் பேசியது:


ஊழியருக்கும் நிர்வாகத்திற்கும் இடையே நல்ல சுமுகமான உறவு [CORDIAL RELATION] இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.


3 rd PRC நல்ல முறையில் உங்களுக்கு அமையும் என்ற நம்பிக்கை [OPTIMISTIC] இருக்கிறது.

BSNL லில் VRS வராது.  அதேபோல் ஒய்வு பெறும் வயதை  60 லிருந்து 58 ஆக குறைக்கவும் வாய்ப்பில்லை. 


நமது நிறுவனம் எல்லா சவால்களையும் சந்திக்கும் திறனோடு இருக்கிறது. 
Monday, November 13, 2017

அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு, தஞ்சாவூர்.


தஞ்சை தலைநகரில் மாபெரும் 
மனிதச் சங்கிலிப் போராட்டம்.
16-11-2017 - மாலை 
=======================================
கோரிக்கைகள்:

ஊதிய மாற்றத்தை உடனே அமுல்படுத்து!
BSNL ஐ நலிவடையச் செய்யும் 
துணை டவர் நிறுவனத்தை உருவாக்காதே!! 

===========================================
 தலைநகர் டெல்லியில் நவம்பர் 9, 10,  11  
3 நாளாய்  முற்றுகைப் போர்!
15 ஆம் தேதி MP க்கு மகஜர்!
16 ம் தேதி மாவட்டத்தில் அனைவரும் 
ஓரணியில் 
சங்கிலியாய் இணைகிறோம் !
இறுதியில் டிசம்பர் 12, 13 ல் மாபெரும் வேலைநிறுத்தம்.

மூளையை கசக்கி முடிவெடுத்த போராட்டம்!
 அதிகாரி, தொழிலாளி அனைவரும் ஓரணியில் 
இணைந்து நடத்தும் போராட்டம்! 
அசையாத, மதியாத மத்திய அரசை 
அசைக்கத்தான் இத்தனைப் போர்!
அலட்சியம் செய்திட வேண்டாம்!
ஆர்ப்பரித்து வாருங்கள்.

இப்போது விட்டால் வேறு எப்போது!
கொள்கையை நெஞ்சிலேந்தி 
கொடிபிடித்து வாருங்கள்! 
கோரிக்கை கோஷங்கள் 
குடையாய் விரியட்டும்!

வாழ்த்துக்களுடன்,
தஞ்சை மாவட்டச் சங்கம். 


Sunday, November 12, 2017சம்பளமாற்றம் குறித்து பிரதமருக்கு பொதுச்செயலாளர் சந்தேஸ்வர் சிங் அவர்கள் எழுதிய கடிதம்:


Saturday, November 11, 2017


மன்னை - கூத்தாநல்லூர் கிளை ஆர்ப்பாட்டம். டெல்லி முற்றுகைப்போருக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டக்  காட்சிகள்:
மாவட்டச் செயலர் தோழர். K. கிள்ளிவளவன், TEPU மாவட்டச் செயலர் தோழர். சேகர்  மற்றும் தோழர்கள், தோழியர்கள் திரளாக பங்கேற்றனர். 

Friday, November 10, 2017மன்னார்குடி கிளையில் ஆதரவு ஆர்ப்பாட்டம்.

11-11-17 காலை 9:30 மணி.
மன்னை கோட்டப் பொறியாளர் அலுவலகம் 

பாராளுமன்ற முற்றுகைப் போர் 
நவம்பர் 9 ம் தேதி முதல் 11ஆம் தேதி வரை 
அனைத்துத் தொழிற்சங்களால் தலைநகர் 
டெல்லியில் நடந்து கொண்டிருக்கிறது.

 சம்பளக் கமிஷன், ஒப்பந்தத் தொழிலாளிக்கு ஊதிய உயர்வு,  
பொதுத் துறைகளை பாதுகாத்தல் 
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  
மூன்றாம் நாளாய்  ஆர்ப்பாட்டம்
நாளையும் நடைபெறுகிறது. 
அதற்கு வலுசேர்க்கும் விதத்தில்  
நாளை மன்னை - கூத்தாநல்லூர் கிளைகள் 
இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

ஆர்ப்பாட்டத்தில் நமது மாவட்டச் செயலர் 
தோழர். K. கிள்ளிவளவன் அவர்கள் 
சிறப்புரையாற்றுகிறார்.

அனைவரும் வருக!

இவண்,
மன்னார்குடி - கூத்தாநல்லூர்
 கிளைச்  சங்கங்கள்.  

தோழர். D. சேகர் TT, அம்மையப்பன்  அவர்கள் 
இன்று 10-11-2017 பூந்தோட்டம் TRANSMISSION க்கு 
மாற்றலில் செல்கிறார்.
கடந்த 2014 முதல் மாற்றலுக்காக காத்திருந்த தோழருக்கு 
இன்று மாவட்டச் சங்கத்தின் 
பெருமுயற்சியால் மாற்றல் கிடைத்துவிட்டது. 
மாற்றலுக்கு உதவிய மாவட்ட நிர்வாகத்திற்கு 
நமது நெஞ்சார்ந்த நன்றிகள்!
தோழர். சேகருக்கு நமது வாழ்த்துக்கள்!

தர்ணாவில்த நமது பொதுச் செயலர் தோழர். சந்தேஷ்வர் சிங் அவர்களும் மற்ற தலைவர்களும் பேசுகிறார்கள். வீடியோ:அருகில் 
தர்ணா காட்சிகள்

Thursday, November 9, 2017

வாழ்க மணமக்கள்!

பட்டுக்கோட்டை தோழர். B. கந்தசாமி BSNL 
அவர்களின் மகன் திருமண விழா. 


NFTE மற்றும் TMTCLU மாவட்டச் செயலர்கள் 
K. கிள்ளிவளவன் - D. கலைச்செல்வன் ஆகியோர் 
பங்கேற்று வாழ்த்தினர். செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR