தினம் ஒரு கருத்து

தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும் நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம் தான் குற்றங்களுக்கு காரணம்...

Friday, September 8, 2017

07-09-2017
தஞ்சை GM அலுவலக கிளை மாநாடு

இன்று மாலை தோழர். R. ராஜேந்திரன் தலைமையில் 
தோழர். S. இளங்கோவன் மாநாட்டை துவக்கி வைத்தார். 
பாஸ்டின் அமலநாதன் அனைவரையும் வரவேற்றார்.

 மாவட்டத் தலைவர் T. பன்னீர்செல்வம்,
 மாவட்டச் செயலர் K. கிள்ளிவளவன், 
TMTCLU மாவட்டச் செயலர் D. கலைச்செல்வன் 
முன்னாள் மாவட்டச் செயலர் தோழர். LCP  
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

வழக்கம்போல் கூச்சல், குழப்பங்கள் இருந்தாலும் 
இறுதியில் பொறுப்பாளர்கள் சுமுகமாகவே 
தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

புதிய பொறுப்பாளர்கள்:
தலைவர்: தோழர். R. ராஜேந்திரன் 
செயலர்: K. சின்னப்பா 
பொருளர்: தோழியர். A. லைலாபானு  

இறுதியாக 
மாநிலத் தலைவர் தோழர். P. காமராஜ் அவர்களும் 
மாநிலச்செயலர் தோழர்.   K. நடராஜன் அவர்களும் 
நிறைவுப் பேருரையாற்றினார்கள்.  

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தோழியர். A.  லைலாபானு அவர்கள் 
தஞ்சையில் நடத்தப் போகும் 
மாநிலச் செயற்குழுவிற்கு 
5000/- ரூபாய் 
நன்கொடை அளித்தார்.
அவரது கொடையுள்ளம்  
அனைவராலும் பாராட்டப்பட்டது.

இறுதியாக புதிய கிளைச்செயலர் 
தோழர். K. சின்னப்பாவின் 
நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது. 
===========================================
 கிளை மாநாட்டுக் 
காட்சிகள் காண 
கீழே சொடுக்கவும்:

No comments:

Post a Comment

election results

Floating Window .......

ELECTION

ELECTION

F

Blog Archive