தினம் ஒரு கருத்து

தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும் நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம் தான் குற்றங்களுக்கு காரணம்...

Saturday, September 2, 2017


அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார்.

மிகவும் வேதனையான செய்தி.  இவருடைய மரணம் எந்த காரணத்தினால் ஏற்பட்டிருந்தாலும் அது முட்டாள்தனமான காரியம்தான். மாணவர்களின் சிந்தனைப் போக்குகள் ஒரு வட்டத்துக்குள்ளேயே இருக்கிறது.  
அது வெளியில்  உலா வரும்போதுதான் நாட்டு நடப்புகள் தெரியும்.   
மத்தியில், மாநிலத்தில் எவ்வளவு மோசமான அரசியல் போக்குகள்,நடந்து கொண்டிருக்கிறது. 
அதையும் தாண்டி உலகில் என்னென்ன நடந்து கொண்டிருக்கிறது.  இதையெல்லாம் உணர வேண்டாமா?  

இவைகளுக்கு  மத்தியில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வில்லா போக்குகள் தான் பலரிடமும் உள்ளது. இந்தப் போக்குதான் மோசடியாளர்களுக்கு மூலதனம்.  7 லட்சம் என்ன, 7 கோடி வந்தாலும் பெற்ற மகளை இழந்த சோகம் தீருமா. கண்ணில்லாதவன், ஏன் இரண்டு கையில்லாதவன் கூட வாழ்கிறான். நாம் வாழ முடியாதா?  என்ற சிந்தனை இல்லாத இவர்கள்
எதைச் சாதிக்கப் போகிறார்கள்?

சாவதற்கு இடையில் வாழப் பிறந்தவர்கள் நாம் 
என்பதை உணர வேண்டும்.

என்ன கொடுமைடா சாமி!
"சட்டமும், நீதியும் மேல்தட்டு மக்களுக்குத்தானா? மூட்டைத் தூக்கும் தொழிலாளியின் மகள் மருத்துவர் 
ஆகக் கூடாதா? 
அன்று மருத்துவக் கல்லூரியில் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் 
என்ற நிபந்தனை! 
இன்றோ மருத்துவக்கல்லூரியில சேர
 நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் 
என்ற நிபந்தனை." 


No comments:

Post a Comment

election results

Floating Window .......

ELECTION

ELECTION

F

Blog Archive