தினம் ஒரு கருத்து

தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும் நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம் தான் குற்றங்களுக்கு காரணம்...

Wednesday, September 13, 2017

BSNL டவர் நிறுவனம் 
தனி நிறுவனமாக அமைக்க 
அமைச்சரவை ஒப்புதல்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு கோபுரங்களை (டவர்கள்) நிர்வகிக்க தனி நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது. மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி பிஎஸ்என்எல் தனி நிறுவனமாக செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 4,42,000 தொலைத்தொடர்பு கோபுரங்கள் உள்ள. இதில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சொந்தமாக 66,000 கோபுரங்கள் உள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு கோபுரங்களை தனியாக பிரித்து, அவற்றை நிர்வகிப்பதற்கு தனி நிறுவனத்தை உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது. பிஎஸ்என் எல் தனி நிறுவனமாக இயங்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு நிறுவனங்களும் தனித் தனியாக இயங்கும். புதிதாக உருவாக்கப்படும் தொலைத் தொடர்பு கோபுர நிறுவனம் கோபுரங்களை நிர்வகிப்பதில் முனைப்பு செலுத்தும். இதன் மூலம் புதிய நிறுவனத்தின் வருவாய் சீராக அதிகரிக்கும்.
இந்த அனுமதி மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது தொலைத் தொடர்பு கோபுர கட்டமைப்புகளை தனியாக பிரித்து துணை நிறுவனத்தை உருவாக்க உள்ளது.
இந்த புதிய நிறுவனம் புதிய கட்டமைப்புகளை சொந்தமாக உருவாக்கும். மேலும் சொத்துகளை நிர்வகிக்கவும், தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு கோபுரங்களை குத்தகைக்கு அனுமதிப்பதையும் முடிவு செய்வதன் முதலீட்டு செலவுகளைக் குறைக்க முடியும். தொலைத் தொடர்பு கோபுர கட்டமைப்புகளை பகிர்ந்து கொள்ள தொலைத் தொடர்பு துறை கொள்கை அனுமதியளிக்கிறது. குறிப்பாக கோபுர கட்டுமானம், டீசல் ஜெனரேட்டர்கள், பேட்டரிகள் மற்றும் மின்சாரம், குளிர்சாதன வசதிகளை பிற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த வசதிகளை பிற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
இந்த முன்மாதிரிகள் பிஎஸ்என்எல் தவிர எம்டிஎன்எல் நிறுவனத்துக்கும் பொருந்தும்.தொலைதொடர்பு கோபுர துறை மூன்று வகைகளில் இயங்குகிறது. நிறுவனங்களை பிரித்து நிர்வகிப்பதன் மூலம் துணை நிறுவனமாக இயங்குவது, நிறுவனங்கள் தனியாக கூட்டு முதலீடு மூலம் உருவாக்கி சேவையைப் பகிர்ந்து கொள்வது, குறிப்பிட்ட நிறுவனத்துக்கென தனியாக கோபுரங்களை உருவாக்குவது என மூன்று வகைகளில் நடைமுறையில் உள்ளன.
நன்றி: தி இந்து நாளிதழ் 

No comments:

Post a Comment

election results

Floating Window .......

ELECTION

ELECTION

F

Blog Archive