தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, September 23, 2017

TRAI அறிவிப்பு
இன்டெர்கனெக்ட் யூசேஜ் சார்ஜ் (IUC )
விலை 14பைசாவிலிருந்து 6 பைசாவா குறைக்கப்படுகிறது.
-------------------------------------------------------------

அம்பானிக்காக அரசுக்கு வர வேண்டிய 3000கோடியை இழக்கும் மோடியின் அயோக்கியத்தனம்:
கார்ப்ரேட் கம்பெனிகளால் ஊதி பெருசாக்கப்பட்ட மோடி பலூன் வாய்ப்பு கிடைக்கும்பொதெல்லாம் அந்த கார்ப்ரேட்களுக்கு நம் பணத்தை வாரி வழங்கி தனது இராஜவிசுவாசத்தை காட்டுவார்.

கடந்த காலங்களில் அதானிக்கு ஆஸ்திரேலியா சுரங்கத்தை வாங்கிகொடுத்தாக இருக்கட்டும். மகேந்திரா கம்பெனிக்கு பிரான்ஸ் நாட்டுடன் சேர்ந்து ஆயுதங்கள் தயாரிக்கும் ஓப்பந்தம் வாங்கி கொடுத்ததாகட்டுமென்று இதற்கு நிறைய உதாரணங்களை சொல்ல முடியும்.அதில் புதிதுதான் அம்பானிக்காக நாட்டிற்கு 3000கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார் இந்த மோடி.

நாம் மொபைல் போனில் பயன்படுத்தும் ’இண்டெர்நெட் காலுக்கான’ விலையை 14பைசாவிலிருந்து 6பைசாவா குறைக்கிறோமென்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) நேற்று அறிவித்திருக்கிறது. இதன்மூலம் மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பயனடைவார்களென்று அரசு சொல்லியிருக்கிறது.

ஆனால் இப்போது பெரும்பாலான நிறுவனங்கள் அது ரிலையன்ஸ் என்றாலும் ஏர்டெல் என்றாலும் வோடபோன் என்றாலும் அல்லது மற்ற நிறுவனங்களானாலும் சரி எல்லோருக்கும் இணையதள சேவையை இலவசமாக அது ஒரு நாளைக்கு 1GBயிலிருந்து எவ்வளவு வேண்டுமானலும் பயன்படுத்திக்கொள்ளலாமென்று கொடுக்கிறது. இதனால் நமக்கு வாய்ஸ் காலுக்கு பைசா எவ்வளவு இருந்தாலும் ஒரு பிரச்சனையுமில்லை. ஏனென்றால் நமக்கு தான் இலவசமாச்சே. ஆனால் நமக்காக குறைக்கிறொமென்று சொல்லி தற்போது ஏன் யாருக்காக இந்த விலையை குறைக்க வேண்டும்.

அதாவது அம்பானியின் ஜியோ சேவை வந்தபின்பு முன்னெப்போதும் இல்லாதளவுக்கு அனைத்து சேவைகளும் இலவசமாக பல நிறுவனங்கள் வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் இனையதளத்தை எவ்வளவு வேண்டுமானலும் பயன்படுத்திக் கொள்ளலாமென்பது. அதன்படி இண்டர்நெட் காலுக்கு இதற்குமுன் ஒவ்வொரு காலுக்கும் 14பைசாவை சேவை கட்டணமாக அரசுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்க வேண்டியிருந்தது. இதன் மூலம் அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் வந்துகொண்டிருந்தது. இதை தற்போது பாதிக்கும் குறைவாக குறைத்ததன் விளைவாக அரசுக்கு வரவேண்டிய வருவாய் பல்லாயிரம்கோடி ரூபாய் குறைந்திருக்கிறது.

குறிப்பாக இந்த விலை குறைப்பினால் அதிகமான லாபமடையப்போவது அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தான். ஏனென்றால் அதிரடியாக சலுகை விலையில் ஜியோ மொபைல் போன் கொடுக்கப்போகிறோம், இலவசமாக பேசிக்கொள்ளலாம், எவ்வளவு வேண்டுமானாலும் இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்

என்று ஏகப்பட்ட சலுகைகளை கொடுத்து இந்த குறுகிய காலத்திலேயே 200மில்லியன் வாடிக்கையாளரை சேர்த்து வைத்திருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். இதனால் ஏற்கனவே இருந்த 14பைசா என்ற நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு நபருக்கு சராசரியாக 30ரூபாய் கொடுக்கவேண்டியிருந்தது. இதனால் வருடத்திற்கு அவர்களுக்கு 7500கோடி ரூபாய் அரசுக்கு சேவை கட்டணமாக கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தற்போது இது பாதிக்கும் அதிகமாக குறைந்து விட்டப்படியால் இனிமேல் அவர்களுக்கு வருடத்திற்கு 3000கோடி ரூபாய் மிச்சமாகும். அவர்களுக்கு மிச்சமாகுமென்றால் அரசுக்கு கிடைத்துக் கொண்டிருந்த வருவாயில் 3000கோடி ரூபாய் இழப்பு எற்படுமென்று பொருள்.

இந்த 3000கோடி ரூபாய் என்பது ரிலையண்ஸ் என்ற ஒரு நிறுவனத்திற்கு மட்டும் கிடைக்கப்பெறப்போகிற லாபம். இந்தியாவில் இதுபோல இருக்கிற எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களையும் கணக்கில் எடுத்துப்பார்த்தால் எவ்வளவு பணத்தை இந்த அரசு கார்ப்ரேட்களுக்காக இழக்கிறது என்று பாருங்கள். இந்த பணம் மட்டும் அரசுக்கு கிடைத்திருந்தால் நாடெங்கும் விவசாயிகள் படுகிற கஷ்டத்திற்கு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கியிருக்க முடியும். இல்லை வட இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் தற்போது ஏற்பட்டிருக்கிற பெருவெள்ளத்தில் சிக்கியிருக்கிற மக்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்க முடியும். ஆனால் அவர்களுக்காகவெல்லாம் மோடியின் 56’இஞ்ச் மார்பு ஒருநாளும் துடிக்காது. அதானி அம்பானிகளுக்கென்றால் அந்த மார்பு வேகமாக துடிக்க ஆரம்பித்து விடும். ஏனென்றால் அந்த மார்பை மோடிக்குள் செலுத்தியது இந்த கார்ப்ரேட் கும்பல்கள் தான்.

இப்போது இன்னொரு கேள்வி உங்களுக்கு எழுகிறதா? இவ்வளவு கோடிகள் இழப்பு எற்பட்டால் இதை இந்த அரசு எப்படி சரிகட்டுமென்று. அதுதான் இருக்கவே இருக்கோமே அடிமை மக்களாகிய நாம். நம்மிடமிருந்து தான் பறிப்பார்கள். அது நேரடியாக இல்லாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அதிக வரி கொண்ட GST போன்றவற்றின் மூலம் அரசு அதை ஈடுகட்டிவிடும். அப்போ நாம் என்ன நீங்கள் கேட்கும் கேள்வி எனக்கு கேட்கிறது. நாம் பொருளாதாரத்தில் நலிவுற்று சாக வேண்டியது தான்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR