தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, October 10, 2017



AGM (A)/CL/ Guidelines  /16-17 சென்னை தேதி 04—10—2017 

கடிதத்தின் தமிழாக்கம்
பெறுநர்
     அனைத்து மாவட்ட தலைமை அதிகாரிகள்,
     தமிழ்நாடு வட்டம்.

                  பொருள் : ஒப்பந்த ஊழியர்கள் – டெல்லி தமைமையக
                                      உத்தரவுகள் அமலாக்கம் – தொடர்பாக.

                     பார்வை கார்பரேட் அலுவலக கடித எண் BSNL / அட்மின் 1/
                                          29 – 5 / 2007 ( Pt ) தேதி 06—02—14.
•••     •••    •••
          ஒப்பந்த ஊழியர்கள் குறித்துக் கீழ்க்கண்ட தொழிலாளர் நலச் சட்டங்களை 
முறையாக, காலத்தில்செயல்படுத்துவது தொடர்பாக மேலே பார்வையில் 
குறிப்பிடப்பட்டுள்ள கார்பரேட் அலுவலகஉத்தரவுகளைக் காண்க. 

i)          தொழிலாளர்கள் பிராவிடண்ட் பண்டு மற்றும் பிற சட்டம் 1952
ii)        தொழிலாளர் காப்புறுதிச் சட்டம் 1948
iii)       ஒப்பந்தத் தொழிலாளர் (வரைமுறைப்படுத்தல் மற்றும் ஒப்பந்த 
        முறைமை ஒழித்தல் ) சட்டம்1970
iv)        தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கல் சட்டம் 1936, மற்றும்
குறைந்த பட்ச ஊதிய சட்டம் 1948, பிற.

BSNL நிறுவனத்திற்காக பணி செய்யம் ஒப்பந்ததாரர்கள் மற்றும்
முகவர்கள் மேற்கண்டசட்டங்களின் ஷரத்துகளை மிகக் கறாராகக் 
கடைப்பிடிக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்  
பட்டிருந்தது.
சட்டபூர்வமாக நிறைவேற்ற வேண்டிய அந்தக் கடப்பாடுகளைக் 
கடைப்பிடிக்கவும்அமலாக்கவும் பலமுறை பல வழிகாட்டு 
நெறிமுறைக் கடிதங்கள் இந்த அலுவலகத்திலிருந்தும்
அனுப்பப்பட்டன.
தமிழகத்தில் பல மாவட்டங்கள் இவற்றை அமல்படுத்தினாலும் 
சில மாவட்டங்கள் இன்னும்முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை
கீழ்க்கண்டவைகள் நிறைவேற்றப்படவில்லை எனத்தெரியவருகிறது,
i)       காலத்தில் தாமதமின்றி ஊதியம் வழங்கல்
ii)     இபிஎஃப் பிடித்தம்
iii)      பிடிக்கப்பட்ட இஎஸ்ஐ தொகையை அதற்குரிய அலுவலகத்தில் 
 செலுத்துவது
மேலும் கீழ்க்கண்ட குறைபாடுகள் இந்த அலுவலகத்தின் கவனத்திற்கு
 வந்துள்ளது.
i)     ஒப்பந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டைவிவரமான சம்பளப்
பட்டியல் ஒப்பந்ததாரரால் வழங்கப்படவில்லை
ii)     ஒப்பந்ததாரர் மாறினாலும் இபிஎஃப் சலுகை தொடர்வதற்காக 
ஒப்பந்த ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் பெற்றுத்தரப்பட வேண்டிய 
நிரந்தர  (இபிஎஃப்)   கணக்கு எண்        UAN No வழங்கப்படவில்லை.
எனவே ஒவ்வொரு மாதமும் 7-ம்  தேதிக்குள்  ஊதியத்தை  வழங்கவும்
உரியஇபிஎஃப்இஎஸ்ஐ  பிடித்தங்களை மேற்கொள்ளவும் 
பொருத்தமான உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கேட்டுக் 
கொள்ளப்படுகிறது.
சென்ற மாத சம்பளபில் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படாமல்
 நிலுவையில் வைப்பதால்ஒப்பந்ததாரர்களால் அடுத்த பில்லை 
தயாரித்து சமர்பிக்க முடியவில்லை எனச் சொல்லப்படுகிறது.
அத்தகைய சந்தர்பங்களில் இபிஎஃப் / இஎஸ்ஐ பிடித்தங்களை
 நிறுத்தி வைத்து ஒப்பந்ததாரர்களின்அடுத்த பில்கள் பரிசீலிக்கப்
படலாம்.  இதனால் ஒப்பந்ததாரர்கள் பில்கள் சமர்பிப்பதும்
பரிசீலிக்கப்படுவதில் ஏற்படக்கூடிய தாமதத்தைத் தவிர்க்கலாம்.

II . நிலுவை ஊதியம் வழங்கல்
குறைந்தபட்ச ஊதியம் திருத்தப்பட்டதைத் தொடர்ந்து பிறப்பிக்கப் 
பட்ட மேதகு சென்னை நீதிமன்ற உத்தரவை 
அமலாக்க20-05-2009 தேதி முதல் உரிய உயர்த்தப்பட்ட ஊதிய 
நிலுவை வழங்க ஏற்கனவே வழிகாட்டுதல் 
தரப்பட்டது .(இவ்வலுவலகக் கடித எண் SR / 50 – 1/BSNLEU /
200–15தேதி27-07-16 காண்க ) ஈரோடுபாண்டிகோவைமதுரை
விருதுநகர்திருநெல்வேலி முதலியமாவட்டங்களில் ஊதிய நிலுவை 
வழங்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது..  ஏனைய மாவட்டங்களி
லிருந்து ஊதிய நிலுவை வழங்குவது தொடர்பாக எந்த 
அறிக்கையோ தகவலோவரவில்லை.  நீதி மன்ற அவமதிப்பு 
வழக்கைத் தவிர்க்க விரைந்து அந்த மாவட்டங்கள் நடவடிக்கை
எடுக்கவும்.
மேலும்ஜனவரி 2017 முதல் தற்போது மீண்டும் திருத்தப்பட்ட                       குறைந்தபட்ச ஊதியத்தால்வழங்க வேண்டிய உரிய ஊதிய நிலுவைகளை                     யும்  வழங்கிடவும்  நடவடிக்கை  எடுக்கவும்.
III போனஸ் தொகை வழங்குவது
ஒப்பந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் ஒப்பந்ததாரர்          அவரால்பணிக்கு அமர்த்தப்பட்டஒப்பந்த ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும்                   போனஸ் சட்டம் 1965 படி போனஸ் வழங்க வேண்டும்ஒப்பந்த                      ஊழியர்களை காண்டிராக்டர்கள் நியமனம் செய்வதால் ஒப்பந்ததாரரே          போனஸ் வழங்கவும் சட்டப்படி கடமைப்பட்டவராகிறார்என்றாலும்,          இந்தச் சட்டபூர்வமான போனஸ் வழங்கும் கடமையை                        நிறைவேற்ற ஒப்பந்ததாரர்களை (அதிகாரிகள்வலியுறுத்த வேண்டும்.
IV ஒப்பந்த ஊழியர்கள் தொடர்பான அனைத்து பிரச்சனை                களையும்  கையாள ஒவ்வொருமாவட்டத்திலும் ஒரு நோடல் அதிகாரியை                        நியமிக்கக் கோரியிருந்தோம்.  தஞ்சைகடலூர் விருதுநகர்,                              தூத்துக்குடி,சேலம், காரைக்குடி குன்னூர், வேலூர்,                  தர்மபுரி,                                       எலெக்ட்டிரிகல் மற்றும் சிவில்மாவட்டங்களிலிருந்து  நோடல் அதிகாரி                                  நியமிக்கப்பட்ட விவரம் வரவில்லை.  அத்தகைய மாவட்டங்கள்                  நோடல் அதிகாரிகளை நியமித்து விபரங்களை உடனே        மாநில                                    அலுவலகத்திற்கு அனுப்பவும்ஒப்பந்ததாரர்கள் பில்கள் சமர்பித்தல்              மற்றும் பரிசீலனை குறித்து கண்காணிக்கும் பொறுப்பு நோடல்            அதிகாரிகளைச் சார்ந்தது.
                                                                 (  ஒம்)
                                                           Dy GM (Admn)
                                                CGM Office BSNL. Chennai.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR