தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, October 27, 2017

NFTE - BSNL 
தஞ்சை மாவட்டம்.
NFTE பேரியக்கத்தின் மூத்த தலைவரும், 
முன்னாள் திருவாரூர் கிளைச்செயலாளருமான 
தோழர். S. மோகன்  STS அவர்கள்  
31-10-2017 ல் பணி ஓய்வு பெறுகிறார்.
====================================

மயக்கும் மோஹனா!

ஆரூரை அழகுபடுத்த வந்த 
கேரளத்து குயில் எங்கள் மோகன்!
பாடுவார், பரதம் ஆடுவார் 
பைந்தமிழ்க் கவிதையும் தருவார்.

ஆரூர் ஒப்பந்தத் தொழிலாளிக்கு 
இவர் அறிவு பூர்வ உதவியாளர்.
சிவப்புச் சிந்தனையாளரான இவர் 
ஆரூர் கிளைக்கு நல்  ஆலோசகரும் கூட.

பட்டாபியின் படைப்பாக பேசப்படும் 
 தோழர். மோகன் இம்மாதம்  
பணியிலிருந்து விடுபடுகிறார்.
அவரை வாழ்த்துவோரும் வாழ்த்துவர்!
தூற்றி மகிழ்வோரும் வாழ்த்துவர்! 

தஞ்சை மாவட்டச் சங்கம் அவரது 
தன்னேரில்லா உழைப்பை 
பாராட்டி மகிழ்கிறது.
நாளும் வாழ்க! நலமே வாழ்க!!


1 comment:

  1. ஆருயிர் தோழர்.S.மோகன், நான் மஸ்தூராய் இருந்த காலத்திலும், மாப்பிள்ளையான கோலத்திலும், JE-யாக பணியாற்றும் நேரத்திலும் மோகனும் அவரது துனைவியாரும் எனக்கு உதவிய உயர்ந்த உள்ளங்கள்.
    ஒரு கலைக்கோவில், கல்விக்கடல் எங்கள் மோகன் குடும்பம்.
    வாழ்த்த வார்த்தை வரவில்லை வான்மழைப் போல் தேன்த்தமிழ் போல் சிறந்து என்றும் வாழ்க 💐🌸💮🌹🌺🌻

    ReplyDelete

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR