தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, October 7, 2017


NFTE - BSNL 
தஞ்சை மாவட்டம்.
தமிழ் மாநில செயற்குழு 
06-10-2017 காலை 10 மணிக்கு மாநிலச் செயற்குழு 
தஞ்சை மாஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
 செயற்குழு கூட்டத்தின் அதிகாரப்பூர்வ 
அழைப்பாளர்கள் 60 பேர்தான் என்றாலும், 
தஞ்சை மாவட்ட முழுமையிலிருந்தும்  265 பேர் 
தோழர்கள் வந்திருந்தனர். ஆக மொத்தம் 325 பேர் பங்கேற்றனர். 


மாநாடு போல் துவங்கிய இச் செயற்குழுவின் நிகழ்ச்சிகள் கொடியேற்றத்துடன் துவங்கியது. தேசியக் கொடியினை 
நமது மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர் 
தோழியர். A. லைலாபானு அவர்களும், 
சம்மேளனக் கொடியினை நமது மாவட்டத் தலைவர்
 தோழர். T. பன்னீர்செல்வம் அவர்களும்  விண்ணதிரும் முழக்கங்களுக்கு இடையே ஏற்றி வைத்தனர்.
நமது சம்மேளனத்தின்  அகில இந்திய முன்னாள் பொதுச்செயலாளரும், ஞானத் தந்தையுமான 
தோழர். D. ஞானையா நினைவரங்கில் 
துவங்கிய செயற்குழுவிற்கு நமது மூத்த தலைவரும், 
முன்னாள் சம்மேளனச் செயலரும் ஆன 
தோழர். R.K அவர்கள் முன்னிலை வகித்தார்.

மாநிலத் தலைவர். 
தோழர். P. காமராஜ் அவர்களின் 
சீரிய தலைமையில் செயற்குழு நடைபெற்றது. 
நல்லதொரு தலைமையுரையினை வழங்கினார்.
 தஞ்சை மாவட்டச் செயலர். 
தோழர். K.  கிள்ளிவளவன் அவர்கள் 
அனைவரையும் வாழ்த்தி வரவேற்புரையாற்றினார்.
அதுபோல மாநில அமைப்புச் செயலர் 
தோழர் அல்லிராஜா அவர்கள் 
மாநிலச் சங்கம் சார்பில் அனைவரையும் வரவேற்றார்.
தமிழ் மாநிலச் செயலர்.
தோழர். K. நடராஜன் அவர்கள் 
நிகழ்ச்சி நிரலை விளக்கி செழுமைப்படுத்தினார்.

கர்நாடக மாநிலச் செயலாளர் 
தோழர். K.S. சேஷாத்ரி அவர்கள் நீண்டதொரு துவக்கவுரையாற்றினார். 

மாநிலப் பொருளர். தோழர். L. சுப்பராயன் அவர்கள் 
நிதி அறிக்கை தாக்கல் செய்து பேசினார்.  
ஒலிக்கதிர் செலவினை ஈடுகட்ட ஒலிக்கதிர் ஆயுள் 
சந்தாவினை ஓய்வு பெற்றோரிடம் பெற்றுத் தரக் கோரி 
ரசீது புத்தங்களை அறிமுகப்படுத்தினார். 

அறிமுகப்படுத்தியவுடனேயே 
தோழர். சென்னகேசவன் அவர்கள் 
ஆயுள் சந்தா செலுத்தி ரசீது பெற்றார்.

சம்மேளனச் செயலர்  தோழர். எஸ்.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள், போனஸ், 3வது ஊதியக் குழு அதை அடைவதற்கான போராட்டத் திட்டம் ஆகியவை குறித்து விளக்கவுரையாற்றினார்.


நமது தஞ்சை மாவட்ட முதன்மைப் பொது மேலாளர் 
திரு. C.V. வினோத் அவர்கள்  நீண்டதொரு 
வாழ்த்துரை வழங்கினார்.  ஊழியர்கள் தங்களை 
தர மேம்பாடு செய்து கொள்ள வேண்டும் என்றும், 
நமது BSNL  நிறுவனத்தை உயர்த்திடும், 
காத்திடும்  பணி, பொறுப்பு ஆகியவை 
உங்கள் கையில்தான் உள்ளது என்பதை 
காரண காரியத்தோடு விளக்கிப் பேசினார்.
பின்னர் நமது ஆற்றல்மிகு தலைவர்
தோழர். R.K அவர்கள் எழுச்சியுரையாற்றினார். 
எதிர்காலத்தில் NFTE ன் போக்கு, 
அனைத்து தொழிற்சங்கங்களும் 
ஒன்று பட்டாக வேண்டிய சூழல்,
நமது போராட்ட முறை ஆகியவை
பற்றியெல்லாம் விளக்கி மிகச் சிறந்த 
அனுபவ உரையினைத் தந்தார்.  
அனைத்து சங்க ஒற்றுமைக்கு 
தான் எடுக்கும் முயற்சிகளை 
கோடிட்டுக் காட்டினார்.
தோழர். R.K அவர்களின் 
ஒரு மணி நேர உரைக்குப் பின் 
மதியம் 2 மணிக்கு அனைவருக்கும் 
அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
பின்னர் மதியம் 3 மணிக்கு 
மீண்டும் செயற்குழு துவங்கியது.
மாநிலச் சங்கப் பொறுப்பாளர்களும், 
மாவட்டச் செயலர்களும் 
தங்கள் பகுதி கோரிக்கைகளையும்,
 செயற்குழு நிகழ்ச்சி நிரல் மீது  
கருத்துக்களையும்  முன்வைத்து 
சிறப்பாகப் பேசினார்கள்.

இடையில் பணி ஒய்வு பெற்ற 
மாநிலச்சங்கப் பொறுப்பாளர்களுக்கு 
பாராட்டு விழா நடைபெற்றது.
தோழர்கள் பாண்டி அசோகராஜன், 
வேலூர் சென்னகேசவன், 
திருச்சி ஆசைத்தம்பி 
ஆகியோருக்கு தலைவர்  R.K அவர்கள் 
சால்வை போர்த்தி பாராட்டுரை நல்கினார். 
தோழர்களும் பாராட்டை ஏற்று
 ஏற்புரையாற்றினார்கள்.

பின்னர் செயற்குழு தீர்மானங்களை 
தோழர் சென்னகேசவன் வாசிக்க 
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சம்மேளன செயலர் தோழர். ஜெயராமன், 
மாநில துணை தலைவர் மேகநாதன், 
தஞ்சை LJCM தலைவர். பிரின்ஸ் 
ஆகியோர் பல்வேறு காரணங்களால் 
செயற்குழுவில் பங்கேற்கவில்லை. 
TMTCLU மாநில செயலாளர் 
தோழர். R. செல்வம் அவர்களும் 
செயற்குழுவை வாழ்த்திப் பேசினார். 

 மாநிலச் செயலர் தோழர். நடராஜன் அவர்கள் 
தோழர்களின் கருத்துக்களை, கோரிக்கைகளை ஒருங்கிணைத்து விளக்கவுரையாற்றினார். சில பிரச்சினைகளுக்கு போராட்ட திட்டங்களையும் கூறினார்.
இறுதியாக மாநில துணைச் செயலாளர் 
தோழர். G.S. முரளிதரன்  அவர்கள் 
நிறைவுரையாற்ற செயற்குழு இனிதே நிறைவுற்றது. 
===================

மாநிலச் செயற்குழு சிறப்பாக நடத்திட 
நிதியளித்த தோழர்களுக்கும், 
ஒரு சில செலவுகளை முழுமையாக 
ஏற்றுக் கொண்ட தோழர்களுக்கும், 
வீடியோ செலவுகளை ஏற்றுக் கொண்ட 
மன்னைக் கிளைக்கும், 
உடலுழைப்பு தந்த தோழர்களுக்கும்,
 அரங்கில் அடுத்தடுத்த பணிகளுக்கு 
உறுதுணையாகவிருந்த மாவட்டத் தலைவர் 
தோழர் பன்னீர் அவர்களுக்கும் 
நெஞ்சார்ந்த நன்றியைத் 
தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன் ,
K. கிள்ளிவளவன், மாவட்டச் செயலர். 
-----------------------------------------------------------------
மேலும் படங்கள் கீழே:


 
 
 
 
 
 
 
  
 
  
 
 
 

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR