தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, November 30, 2017




நவம்பர் 27, 1820 எங்கல்ஸ் பிறந்த நாள்!
கம்யூனிச ஆசான்களில் ஒருவரான எங்கெல்ஸ் : Friedrich Engels (1820 -1895) இல் பிறந்தார்.
அவர் கம்யூனிச தத்துவார்த்தத்தை உருவாக்கிய கார்ல் மார்க்சின் உயிர்த்தோழர். ஒரு‍ நெசவாலை முதலாளியின் மகனாக ஜெர்மனியில் பிறந்தவர். அதிகம் படிக்க ஆசை இருந்தும் 17 வயதில் அப்பாவின் தொழிலை பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனாலும் சுயமாக கல்வி பயின்று‍ மேதையானார். மார்க்ஸ் இவரை ‘இன்னொரு‍ நான்’ என அழைத்தார்.
எங்கல்ஸ் 20-க்கும் மேற்பட்ட மொழிகளை பயின்றவர். அந்த காலகட்டத்தில் வெளியான அறிவியலின் பல பிரிவுகளை அவர் கரைத்துக் குடித்து‍ இருந்தார். அவர் ராணுவத்திலும் பணியாற்றினார். கம்யூனிச தத்துவம் உருவாக காரணமான முக்கியமான கருத்துக்களை மார்க்சுக்கு‍ அறிமுகப்படுத்தியவராக எங்கல்ஸ் இருந்தார். எங்கல்சின் பண உதவி இல்லாமல் இருந்தால் மார்க்ஸ் பட்டினியால் செத்திருப்பார்.
குடும்பம், தனிச்சொத்து, அரசு‍ ஆகியவற்றின் தோற்றம், இயற்கையின் இயக்கவியல் போன்ற நூல்களை எங்கல்ஸ் எழுதியுள்ளார். மார்க்சி்ன் நூல்களுக்கும் எங்கல்ஸ் உதவி உள்ளார்.
மூலதனம் எனும் நூல் தொகுதியில் முதல் புத்தகத்தை வெளியிட்டு விட்டு‍ மார்க்ஸ் மறைந்து‍விட்டார். மார்க்ஸ் மறைவுக்குப் பிறகு‍ அவரது‍ குறிப்பு நோட்டுகளில் இருந்து‍ மற்ற மூன்று‍ புத்தகங்களையும் எங்கல்ஸ்தான் தொகுத்து‍ வெளியிட்டார். அவர் இல்லாவிட்டால் நமக்கு‍ இப்போது‍ இருக்கிற மாதிரி முழுமையான வடிவில் கம்யூனிச தத்துவம் கிடைத்து‍ இருக்காது.
தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டு‍ 1895, ஆகஸ்ட் 5 இல் எங்கல்ஸ் இறந்தார்.

Wednesday, November 29, 2017


டிசம்பர் 13, 12 இரண்டு நாள் 
வேலை நிறுத்த  விளக்கக்  கூட்டம்  

நாள்: 08-12-2017  மாலை 4 மணி.
இடம்:  தஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்பகம் 


தஞ்சையில் பங்கேற்கும் தலைவர்கள்:

தோழர். K. முருகேசன் NFTE
 தோழர். C. துரையரசன் AIBSNLEA 
தோழர். S. சுப்பிரமணியன் BSNLEU  
தோழர். K. பழனியப்பன் SNEA
தோழர். இளங்கோவன் TEPU 
தோழர். G. கனகராஜன் SEWA BSNL 
மற்றும் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள்.
திரண்டு வருக தோழர்களே!!



Monday, November 27, 2017

 ==============================================
ஊதியப்பேச்சு வார்த்தையும் 
DPE ஒப்புதலும்…

பொதுத்துறை ஊழியர்களுக்கான 8வது ஊதியப்பேச்சுவார்த்தையை அந்தந்த பொதுத்துறை நிறுவனங்கள் ஊழியர் சங்கங்களுடன் பேசி முடித்திட மத்திய அமைச்சரவை 22/11/2017 அன்று ஒப்புதல் அளித்திருந்தது. 
அதனையொட்டி 24/11/2017 அன்று DPE இலாக்கா 
அதற்கான நிர்வாக உத்திரவைப் பிறப்பித்துள்ளது.

அந்த உத்திரவின்படி…
01/01/2017 முதல் 5 ஆண்டுகள்/10 ஆண்டுகள்  கால இடைவெளியில் ஊதிய மாற்றம் பெற்றவர்கள் ஊதியப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் துவங்கலாம்.

ஊதியப்பேச்சுவார்த்தையைத் துவங்குமுன் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஊதியமாற்றத்திற்கான 
செலவிடும் திறன் AFFORDABILITY.. 
ஊதிய மாற்றச்செலவுகளைத் 
தாங்கிடும் திறன் SUSTAINABILITY கொண்டதாக இருக்கவேண்டும்.

அரசு எந்தவித நிதி உதவியும் செய்யாது. 
சம்பந்தப்பட்ட நிறுவனமே முழு நிதிச்செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஊழியர்களின் ஊதிய விகிதங்கள் 
அதிகாரிகளின் சம்பள விகிதங்களை 
ஒருக்காலும் மிஞ்சி விடக்கூடாது.

ஊதிய மாற்றத்தால் தங்களது துறையின் 
உற்பத்திப்பொருளின் விலையையோ.. சேவைக்கட்டணத்தையோ உயர்த்துதல் கூடாது.

இதுபோன்ற வழக்கமான பல்லவி நிபந்தனைகளுடன்...
DPE இலாக்கா தனது நிர்வாக உத்திரவை வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட உத்திரவு நமது நிறுவனத்திற்குப் பொருந்துமா?
ஊதியப்பேச்சுவார்த்தை உடனடியாகத் துவங்குமா?
என்பது ஊழியர்களின் எதிர்பார்ப்பாகும்.

ஆனாலும் வரிக்கு முந்தைய இலாபம்… PBT… 
AFFORDABILITY… SUSTAINABILITY என்ற நிபந்தனைகள்
நமக்குத் தடைக்கற்களாக இருக்கின்றன.

அரசு எந்த நிதி உதவியும் செய்யாது. சம்பந்தப்பட்ட நிறுவனமே 
முழு ஊதியச்செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் 
என்ற நிபந்தனை விதிக்கப்பட்ட பின் 
ஊதிய மாற்றத்திற்கு இலாப நட்டம் பார்ப்பதேன்? 
இதுவே சாதாரண ஊழியனின் நியாயமான கேள்வியாகும்.

ஊதிய மாற்ற முழுச்செலவையும் 
தானே ஏற்றுக்கொள்ளும் நமது நிறுவனம் 
உடனடியாகப் பேச்சுவார்த்தையைத் துவங்க வேண்டும்.
இதுவே சாதாரண ஊழியனின் எதிர்பார்ப்பாகும். 
============================================================

Sunday, November 26, 2017

26-11-2017
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 
ஒப்புதல் பெற்ற நாள்: 1949 நவம்பர் 26
 புது டில்லியின் அரசியல் நிர்ணய சபை மண்டப அரங்கில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முழு வடிவத்தில் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் கையெழுத்திடுகிறார்.

1950 ஜனவரி 24 அன்று இந்தியாவின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில்  அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் கையெழுத்திடுகிறார்கள். படத்தில் சர்தார் வல்லபபாய்படேல், தொழிலாளர் துறை அமைச்சர் ஜெகஜீவன்ராம் உள்ளிட்டோர்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியல் சட்டத்துக்கு மிகப் பெரிய வரலாற்றுப் பின்னணியும் சிறப்புகளும் உண்டு. உலகிலேயே மிகப் பெரிய அல்லது மிக நீண்ட, எழுத்துபூர்வமான அரசியல் சட்டம் நம்முடையதுதான். 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தால் இது முறையாக ஏற்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடையும்போது அதற்கென்று தனி அரசியல் சட்டம் வேண்டும், அதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என்று தலைசிறந்த இடதுசாரிச் சிந்தனையாளர் எம்.என். ராய் முதன்முதலாக 1934-ல் குரல் கொடுத்தார். அவருடைய யோசனையை ஏற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1935-ல் அதையே தீர்மானமாக நிறைவேற்றி, பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பியது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசும் அந்த யோசனையை ஏற்றது. கவர்னர் ஜெனரல் லின்லித்கோ பிரபு தலைமையிலான தேசிய நிர்வாகக் கவுன்சில் இதற்காக விரிவுபடுத்தப்பட்டது. அப்போதே பூர்வாங்க வேலைகள் தொடங்கின.
நிர்ணய சபை
அரசியல் சட்டத்தை வகுப்பதற்கான அரசியல்சட்ட நிர்ணய சபை 9.12.1946-ல் முதல்முறையாகக் கூடியது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபம் என்று இப்போது அழைக்கப்படும் இடத்தில்தான் அரசியல் சட்ட நிர்ணய சபை கூடியது. இந்தச் சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 389 என்று முதலில் நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்ததாலும், சில சமஸ்தானங்கள் உறுப்பினர் தகுதியை இழந்ததாலும் இந்தியப் பகுதிக்கான அரசியல் சட்ட நிர்ணய சபையின் உறுப்பினர் எண்ணிக்கை 299 ஆகக் குறைந்தது. இவற்றுள் 207 உறுப்பினர்கள் பல்வேறு மாகாண சட்டசபைகளிலிருந்து பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சுதேச சமஸ்தானங்கள் 93 பிரதிநிதிகளை அனுப்பின. 4 பிரதான மாகாணங்களிலிருந்து 4 பேர் சேர்க்கப்பட்டனர்.
13.2.1946-ல் இந்த சபைக்கான நோக்கங்களைத் தெரிவிக்கும் தீர்மானத்தை ஜவாஹர்லால் நேரு முன்மொழிந்தார். 22.1.1947-ல் இந்தத் தீர்மானம் ஏற்கப்பட்டது. 14.8.1947-ல் இந்த சபை கூடி, சட்டத்தை வகுக்கும் பணியைத் தொடங்கியது. 29.8.1947-ல் அரசியல் சட்டத்தை வகுக்கும் குழு, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமை யில் அமைக்கப்பட்டது. அரசியல் சட்ட நிர்ணய சபைக்கு முதலில் சச்சிதானந்த சின்ஹா தலைவரானார். பிறகு, பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையேற்றார். ஹரேந்திர குமார் முகர்ஜி என்ற வங்காள கிறிஸ்தவர் துணைத் தலைவரானார்.
இந்த அரசியல் சட்ட நிர்ணய சபை, பல்வேறு குழுக்களாகப் பிரிந்து பணி செய்தது. பாபு ராஜேந்திர பிரசாத் 4 குழுக்களுக்குத் தலைவராக இருந்தார். நிர்ணய சபைக்கான விதிகளை வகுக்கும் குழு, வழிகாட்டும் குழு, நிர்ணய சபைக்காகும் நிதியை நிர்வகித்தல், ஊழியர்களை அமர்த்துதல் ஆகியவற்றுக்கான குழு, தேசியக் குடியைத் தேர்வுசெய்யும் குழு ஆகியவற்றுக்கு அவர் தலைவராகத் திகழ்ந்தார்.
தலைவர் அம்பேத்கர்
மாநிலங்களின் சட்டங்களுக்கான குழு, மத்திய அரசின் அதிகாரங் களையும் கடமைகளையும் வகுக்கும் குழு, மத்திய அரசின் அரசியல் சட்டங்களைத் தெரிவு செய்யும் குழு ஆகியவற்றுக்கு ஜவாஹர் லால் நேருவே தலைவராக இருந்தார். அடிப்படை உரிமைகள், சிறுபான்மை யினர், பழங்குடிகள் உரிமை, விலக்களிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான ஆலோசனைக் குழுவுக்குத் தலைவர், உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல். ஒட்டுமொத்தமான அரசியல் சட்ட வரைவுக் குழுத் தலைவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.
இந்த அரசியல்சட்ட நிர்ணய சபை மொத்தம் 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாட்களுக்குப் பணி செய்தது. 11 தொடர்களாகக் கூட்டங்கள் நடந்தன. மொத்தம் 165 நாட்கள் சபை கூட்டம் நடந்தது. அதில் 114 நாட்கள் வரைவு அரசியல் சட்டம் தொடர்பான பிரதான விவாதங்களுக்கும் திருத்தத் தீர்மானங்களுக்கும் செலவிடப்பட்டது. மொத்தம் 7,635 திருத்தத் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றுள் 2,473 விவாதித்து பைசல் செய்யப்பட்டன. பிரிட்டனில் நடை முறையில் உள்ள அரசியல் சட்டத்தை அடிப்படையாக வைத்து, இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளின் அரசியல் சட்டங்களின் சில அம்சங்களும் தேவைக்கேற்பச் சேர்க்கப்பட்டன.
சமத்துவ, மதச்சார்பற்ற…
இந்திய அரசியல் சட்டத்தில் மொத்தம் 395 பிரிவுகள், 12 அட்ட வணைகள் இடம்பெற்றன. இந்திய அரசியல் சட்டம் ஆங்கிலம், இந்தி ஆகிய 2 மொழிகளில் இயற்றப்பட்டிருக்கிறது.
“இறையாண்மை மிக்க, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு” என்று இந்திய அரசியல் சட்டம் நம் நாட்டைப் பற்றிக் கூறிக்கொள்கிறது. அனைவருக்கும் சம நீதி, சம அந்தஸ்து, சம சுதந்திரம் வழங்குவதே இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சம். 1976-ல் இந்திராகாந்தி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திருத்தம் மூலமாகத்தான் நம்முடைய அரசியல் சட்டத்தின் முகப்பு வாசகத்தில் ‘சோஷலிச, மதச்சார்பற்ற’ என்ற 2 வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. 26.11.1949-ல் அரசியல் சட்டம் இறுதி செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. சபையின் 284 உறுப்பினர்கள் 24.1.1950-ல் அதில் கையெழுத்திட்டார்கள்.
26.1.1950-ல் புதிய இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. அன்றைய தினம் தேசிய சட்டப் பேரவையின் பதவிக்காலம் முடிந்து, அதுவே நாடாளுமன்றமாக மாறியது. 1952-ல் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, புதிய நாடாளுமன்றம் உருவானது.
இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடாகத் திகழ முக்கியமான காரணம், நம்முடைய அரசியல் சட்டம்தான். மகத்தான மானுட ஆவணம் என்று அழைக்கப்படும் ‘இந்திய அரசியலமைப்புச் சட்ட’த்தின் உருவாக்கத்தில் நூற்றுக் கணக்கான ஆண்டுகளின் போராட்டங்கள், தவிப்புகள், மகத்தான தலைவர்களின் கனவுகள், தியாகங்கள் எல்லாமே இருக்கின்றன. நள்ளிரவில் சுதந்திர நடையை ஆரம்பித்த நம் தேசத்துக்கு, வெளிச்சத்தைத் தந்தது நமது அரசியலமைப்புச் சட்டமே. அது ஏற்கப்பட்ட இந்த நாள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள்.
ஒட்டுமொத்த இந்தியாவா, இந்தி இந்தியாவா?
இந்தி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளின் ஆதிக்கத்தை எதிர்த்துத் தமிழகத்தைச் சேர்ந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி எழுப்பிய குரல் மிகவும் முக்கியமானது: “ஷேக்ஸ்பியரையும் மில்டனையும் படிக்குமாறு கட்டாயப்படுத்தியதால் ஆங்கிலத்தை வெறுத்தோம்; இந்தியைப் படித்துத்தான் தீர வேண்டுமென்றால், படிக்கும் வயதைக் கடந்துவிட்ட என்னால் படிக்க முடியாது. நீங்கள் எனக்குத் தரும் நெருக்கடியாலும் படிக்க முடியாது. வலுவான மத்திய அரசு வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், அந்த மத்திய அரசு மக்களை அடிமைப்படுத்தி தேசிய மொழியைப் படிக்குமாறு கட்டாயப்படுத்தும் என்றும் அஞ்சுகிறோம். ஏற்கெனவே, தென்னிந்தியாவில் சிலர் பிரிவினையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்தியைக் கட்டாயமாக்க வேண்டும் என்று ஐக்கிய மாகாண நண்பர்கள் வலியுறுத்துவது நாட்டின் ஒற்றுமைக்கு எந்த விதத்திலும் உதவாது. ஒட்டுமொத்த இந்தியா வேண்டுமா, இந்தி இந்தியா வேண்டுமா என்பதை அவர்கள்தான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.”
பக்கம்பக்கமாய்…
இந்திய அரசியல் சட்ட நிர்ணய சபைக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள், நடைமுறைகள், செயல்பாடுகள் 11 பெரிய தொகுப்புகளாக அச்சிடப்பட்டுள்ளன. இவற்றில் சில 1,000 பக்கங்களுக்கும் மேல் கொண்டவை.
தனி சோபை
காந்தி குல்லாய்களும் நேரு பாணி சட்டைகளும் நிறைந்த அவையில் 9 பெண்கள் இடம்பெற்றிருந்தது அவைக்குத் தனி சோபையைத் தந்தது என்று ஒரு தேசிய நாளிதழ் வர்ணித்திருந்தது. காலம்காலமாகப் பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டிவைத்திருந்த இந்திய சமூகத்தில் இது பெரும் புரட்சி!
காந்தியும் அம்பேத்கரும்
இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவர் அம்பேத்கருடன் குழு உறுப்பினர்கள்.
மிகக் குறுகிய காலமே சட்ட அமைச்ச ராகப் பணியாற்றினாலும், சுதந்திர இந்தியாவின் சட்டப் பாதைக்கு மகத்தான வழிகாட்டியவர் அம்பேத்கர். சுதந்திரத்துக்குப் பிந்தைய முதல் அமைச்சரவைப் பட்டியல் காந்தியின் பார்வைக்குப் போனபோது அதில் அம்பேத்கர் பெயர் இல்லை. அப்போது “சுதந்திரம் இந்தியாவுக்குக் கிடைத் திருக்கிறது. காங்கிரஸுக்கு அல்ல” என்றார் காந்தி. சட்ட அமைச்சராக அம்பேத்கர் பெயர் இடம்பெற்றது.
இங்கிலீஷ் பேண்டு
அரசியலமைப்புச் சட்டத்துக்கு விமர்சகர்களும் உண்டு. கிராமம், நகரம் இரண்டில் இந்தியா எதை அடிப்படையாகக்கொள்வது என்ற கேள்வி அப்போது எழுந்தது. கிராமமா, நகரமா என்பதைவிட, தனிநபரை அடிப்படையாக வைத்தே சட்டங்கள் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அரசியல் சட்டம் தொகுக்கப்பட்ட பிறகு, காந்தியத் தன்மையே இதில் இல்லையே என்று மகாவீர் தியாகி ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். “என்னைப் போன்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகள் வீணை அல்லது சிதாரின் ஒலியைத்தான் எதிர்பார்த்தோம், முடிவில் இங்கிலீஷ் பேண்டு அல்லவா ஒலிக்கிறது?” என்று அங்கலாய்த்தார் கே. ஹனுமந்தையா.
தோழர். R.K. கோஹ்லி அவர்கள் 
மறைந்தார்  

மத்திய சங்கத்தின் மூத்த தலைவர் 
NFPTE துவங்கி NFTE  -  BSNL வரை
 நமது இயக்கத்தோடு இரண்டறக் கலந்தவர். இன்று காலை புது டில்லியில் அவரது இல்லத்தில் இறந்தார்.
அவரது மறைவுக்கு கொடிதாழ்த்தி அஞ்சலி செலுத்துவோம்!

தோழரின்   மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 3 தினங்கள் சம்மேளனக்கொடியை அரை கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.






24-11-2017
கூத்தாநல்லூர்  கிளையில்  
சம்மேளன தின விழா

Saturday, November 25, 2017

24-11-2017 மாலை மன்னை கோட்டபொறியாளர் அலுவலகத்தில் 
NFTE  FEDERATION DAY நடைபெற்றது. 
தோழர் தர்மராஜன் அவர்கள் சங்க கொடியினை ஏற்றுவித்தார். 
மாவட்ட செயலர் 
தோழர். K. கிள்ளிவளவன்  சிறப்புரையாற்றினார்.


=======================================================================

திருத்துறைப்பூண்டி கிளை 
சம்மேளன தின விழா காட்சிகள்:




23-11-2017
தஞ்சை ட்ரான்ஸ்மிஷனில் பணியாற்றும் 
மூவரைக்கோட்டை சேகர் TT அவர்களின் மகள் 
திருமண விழா!


மாவட்டச் செயலர்  
தோழர்.K. கிள்ளிவளவன் அவர்கள் 
தோழர்களுடன் சென்று 
மணமக்களை வாழ்த்தினார்.  





Friday, November 24, 2017

மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்
23-11-17
இன்று மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற்ற 
மனித சங்கிலியில்  400 க்கும் மேற்பட்ட
தோழர்கள், தோழியர்கள் பங்கேற்றனர். 
மேரீஸ் கார்னர் வாயில் துவங்கி 
வினோதகன் ஆஸ்பத்திரி வரை 
சுமார் அரை கி.மீ தூரம் கைகோர்த்தனர். 
திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், முத்துப்பேட்டை
 தோழர்கள் ஒரு வேனிலும், 
பட்டுக்கோட்டை தோழர்கள் ஒரு வேனிலும் 
திரண்டு வந்திருந்தனர்.
இறுதியில் போராட்டக் குழுவின் 
கன்வீனர் தோழர். உதயன் அவர்கள் 
அடுத்த கட்டப் போராட்டத்தை விளக்கியும் 
 அதற்கு எவரும் விடுபடாது பங்கேற்க 
வேண்டுகோள் விடுத்தும், வந்திருந்த அனைவருக்கும் 
 நன்றியைக் கூறி போராட்டத்தை நிறைவு செய்தார்.












































செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR