தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, January 17, 2018

ஜனவரி 19 தியாகிகள் தினம் 

1982 ஆம் ஆண்டு ஜனவரி 19 அன்று நடைபெற்ற பொதுவேலை நிறுத்தப் போராட்டத்தில் காவல் துறையினால் சுட்டுக் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த தியாகிகள்

 அஞ்சான், நாகூரான், ஞானசேகரன்

 ஆகியோரின் நினைவுதினம் ஜனவரி 19 ல்  தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

19-01-2018 அன்று மன்னார்குடியில் தியாகி ஞானசேகரன் நினைவு ஸ்தூபியில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 இந்த தினத்தில் தியாகிகள் தின உறுதியேற்பு தமிழகமெங்கும் நடைபெறுவதில் நாமும் பங்கெடுப்போம். இத்தியாகச் செம்மல்களின் நினைவு நாளில் தொழிலாளிவர்க்க ஒற்றுமையைப் பாதுகாப்போம்.

நடந்தது என்ன?      விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைத்து 1982, ஜனவரி 19 அன்று, அகில இந்திய பொது வேலைநிறுத்த அறைகூவலை தொழிற்சங்கம் விடுத்தது. தொழிலாளர்களின் கோரிக்கைகளோடு விலைவாசி போன்ற மக்களின் இதர பல கோரிக்கைகளையும் இணைத்துக் கொண்டு தொழிலாளி வர்க்கம் களம் கண்டது.                                                 மேலும் படிக்க click Read more> 

Tuesday, January 16, 2018

பிஎஸ்என்எல் அதிரடி: 

மொத்த ரீசார்ஜ்களையும் திருத்தியது; 

ஜன.15 முதல் அமல்

Monday, January 15, 2018


எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞானி காலமானார்

ஜனவரி 4, 1954 ல் பிறந்த ஞாநியின் இயற்பெயர். சங்கரன். ஞாநி சங்கரன் என்று தான் அவர் அழைக்கப்பட்டார். அவர் இன்று அதிகாலை, சென்னையில் உள்ள அவரது வீட்டில் உடல் நலக் குறைவால் இறந்து போனார். பல நாட்களாக சிறு நீரக கோளாறால், வாரத்தில் மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தார் ஞாநி. சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் இன்னும் சில ஆண்டுகள் அவர் வாழ்ந்திருப்பார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான சிலர்.

1970 களில் சுமார் 6 ஆண்டுகள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் செய்தியாளராக பணி புரிந்தார். அவருடைய தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக எக்ஸ்பிரஸ் நிருவாகத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின்னர் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர் போட்ட வழக்கில் வெற்றி பெற்று எக்ஸ்பிரஸில் சேர்ந்தார். ஒரு நாள் மட்டும் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வேலை செய்து விட்டு, ராஜினாமா செய்து விட்டு, இனிமேல் மாதக் கூலிக்காக, முழுநேர ஊழியனாக, எங்கும் வேலை செய்ய மாட்டேன் என்று சபதம் எடுத்து விட்டு, 'சுதந்திர பத்திரிகையாளனாக’ செயற்படத் துவங்கினார்.

தந்தை பெரியாரை பற்றி, தூர்தர்ஷன் சார்பாக ஒரு டாக்குமெண்டரி படம் எடுத்தார். கிட்டத் தட்ட 100 நிமிடங்கள் ஓடக் கூடிய டாக்குமெண்டரி படம் இது. மதச்சார்பின்மை என்ற கொள்கையில் இறுதி வரையில் உறுதியாக இருந்தார் ஞாநி. இயற்கை எவ்வளவு அழகானது என்பதை ஞாநி கடைசியாக அவர் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் எழுதியதில் இருந்து எளிதாக புரிந்து கொள்ளலாம். '’துக்ளக் ஆண்டு விழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன். குருமூர்த்தி பகிரங்கமாக பிஜேபி நிலை எடுக்கிறார். சோ இவ்வளவு பகிரங்கமாக எடுக்க மாட்டார். பிஜேபி யையும் லேசாக கிண்டல் செய்வார். குருமூர்த்தி பிஜேபி சங்க பரிவாரத்தின் குரலாகவே ஒலிக்கிறார். இப்படி வெளிப்படையாக இருப்பது வரவேற்கத் தக்கது.முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்குப் புரியும்’’. ஞாநியின் மறைவு நிச்சயம், தமிழ் பத்திரிகை உலகத்துக்கும், சிவில் சமூகத்துக்கும் ஒரு இழப்புதான். தன்னுடைய உடலை தான் மறைந்த பிறகு மருத்துவ ஆராய்சிக்கு கொடுத்து விட வேண்டும் என்று ஏற்கனவே ஞாநி முறைப்படி, சட்டரீதியில் எழுதி வைத்து விட்டார். அதன்படி ஞாநி யின் பூத உடல் சென்னை அரசு பொது மருத்துவனைக்கு கொடுக்கப் பட்டு விட்டது.


15-01-2018 முதல் புதிய ஆபர் சில மாற்றங்களுடன் UPDATE செய்யப்பட்டுள்ளது.        15-01-2018
REGULAR: 220   =    220
                      550   =    575
                    1100   =  1200 
                    2000   =  2300
                    3000   =  3600

FRESH
   
                               290     --      319                              (12-01-18 to 16 - 01 - 18


PLAN 186:     28 நாட்கள். 
                        அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                          தினசரி 1 GB டேட்டா.
                          தினசரி 100 SMS  
                          ரோமிங் உண்டு.

PLAN 429:    81 நாட்கள். 
                        அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                          தினசரி 1 GB டேட்டா.
                          தினசரி 100 SMS  
                          ரோமிங் உண்டு.
==========================================
   
PLAN 485:     90 நாட்கள். 
                        அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                          தினசரி 1.5 GB டேட்டா.
                          தினசரி 100 SMS  
                          
                          ரோமிங் உண்டு.

===========================================
PLAN 666:    129 நாட்கள். 
                        அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                          தினசரி 1.5 GB டேட்டா.
                          தினசரி 100 SMS  
                          ரோமிங் உண்டு.
=========================================
STV 187:        28 நாட்கள். 
                        அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                          தினசரி 1 GB டேட்டா.
                          தினசரி 100 SMS  
                          ரோமிங் உண்டு.


STV 349:       54 நாட்கள். 
                        அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                          தினசரி 1 GB டேட்டா.
                          தினசரி 100 SMS  
                          ரோமிங் உண்டு.
=========================================

STV 333             : 56 நாட்கள்  
                              தினசரி 1 GB டேட்டா மட்டும் 
=========================================

STV 444            : 90 நாட்கள்  
                              தினசரி 2 GB டேட்டா மட்டும் 


STV 339            :    26 நாட்கள் 
                               BSNL மட்டும் இலவசம்.
                               மற்றவை தினசரி 30 நிமிடம் மட்டும் இலவசம்.
                               அதற்கு மேல் நிமிடத்திற்கு 25 பைசா.
                               தினசரி 3 GB டேட்டா 
==========================================
STV 395           :    71 நாட்கள் 
                              BSNL 3000 நிமிடம் இலவசம் 
                              மற்றவை 1800 நிமிடம் இலவசம் 
                              அதற்கு மேல் நிமிடத்திற்கு 20 பைசா
                              தினசரி 2 GB டேட்டா

Saturday, January 13, 2018

போக்கி (போகி) பண்டிகை 
13-01-2018
பண்டிகை என்றாலே கொண்டாடத்தானே!
அப்போ, போகிப் பண்டிகையும் கொண்டாட வேண்டும்தானே! அப்படிப்  புரிந்து கொண்டதால்தான் 
இந்தப் பதிவு தோழர்களே!

தமிழர் திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவதற்காக தை  பிறப்பதற்கு முதல் நாள் செய்யப்படும் முன் ஏற்பாடுதான் போகிப் பண்டிகை.

கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படுவதுதான்  போகிப் பண்டிகையாகும்.

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற கருத்து எவ்வளவு பொருத்தப்பாடான ஒன்றாக இருக்கிறது. ஆனால் சிலர் பழையன அழிதலும் என்று புரிந்து கொண்டு பலவற்றை அழித்தே விட்டார்கள். முற் காலங்களில் பழைய சுவடிகளை எல்லாம் சிலர் அழித்து விட்டார்களாம். 

பழமையான துயரமான நினைவுகளை அழித்துப் போக்கும் இப்பண்டிகை "போக்கி' எனப்பட்டது. அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. 

இந்த நாள் 'பழையனவற்றை  கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், தேவையற்றவற்றையும் தூக்கி எறியும் நாளாகக் கருதப்படுகிறது.

பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்து, வர்ணம் தீட்டுவது தமிழர்களின் வழக்கம்.  அவ்வாறு சுத்தம் செய்யும்போது தேவையற்ற பழைய  
பொருட்களை எடுத்து போகி அன்று எரிப்பார்கள், தூக்கி எறிவார்கள். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பதுதான்  இதில் உள்ள தத்துவம்.   சுத்தத்தை வலியுறுத்தும் இத் திரு நாளை போற்றுவோம் நண்பர்களே!

 அனைவருக்கும் இனிய 
போகித் திருநாள் வாழ்த்துக்கள்!

Friday, January 12, 2018அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் 
தமிழ்ப் புத்தாண்டு  வாழ்த்துக்கள்! 

தமிழர் திருநாள்

தை பொறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு வாய்ந்த மாதங்களில் முக்கியமானது தை. தை மாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக, பொங்கல் தினமாக உலகத் தமிழினம் கொண்டாடி வருகிறது. தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகாவும் இந்த நாள் ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டது. இடையில் சித்திரைக்கு மாறிப் போனது. இப்போது மீண்டும் தை முதல் நாளை புத்தாண்டின் முதல் நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தினமாகவும் கொண்டாடப்படுகிறது. 

தமிழர் திருநாள்... தைப் பொங்கல், அறுவடைத் திருநாள் என கூறப்படும் பொங்கல் பண்டிகை, தமிழர் பண்டிகை ஆகும். பொங்கல் என்பதற்கு சாப்பிடும் பொங்கல் என்று பொருள் அல்ல. பொங்கிப் பெருகி வருவது என்று பொருள். தமிழர்கள் இருக்குமிடமெல்லாம் பொங்கல் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, மலேசியா, கனடா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் கூட விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். மலேசியா,இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பொங்கல் பண்டிகையன்று அரசு விடுமுறையும் கூட விடுகிறார்கள். 
12-01-1863  -  04-07-1902இன்று ஜனவரி-12, சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள்.

வாழ்க்கையில் துன்பங்களைக் களைய அவர் காட்டும் வழியை
எனக்கும், உங்களுக்குமாக இங்கு நினைவுபடுத்திக் கொள்ள
விரும்புகிறேன்.


ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் – சுவாமி விவேகானந்தருக்கும்
இடையே நிகழ்ந்த ஒரு உரையாடல் –
சுவாமி விவேகானந்தர் – நாம் ஏன் எப்போதும்
மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறோம் ?

ராமகிருஷ்ண பரமஹம்சர் – துன்பத்தையே நினைத்து
கற்பனை செய்துகொண்டிருப்பது உன் வழக்கமாகி விட்டது.
அதனால் உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.
வி – கடினமான சூழ்நிலைகளில் நீங்கள் எப்படிஉற்சாகம் குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்…?
ரா – எப்போதும் – இனி எப்படி போகப்போகிறோம் என்று
அச்சப்படுவதை விட, இதுவரை நீ எப்படி வந்திருக்கிறாய்,
எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறாய் என்று பார்.
உனக்கு கிடைத்த வரங்களை எண்ணிக் கொள்.
இழந்தவைகளை அல்ல.
வி – இந்த மக்களை நினைத்து நீங்கள் வியக்கும்
விஷயம் எது ?
ரா – துன்பப்படும்போது –
“எனக்கு ஏன் ?”,
“என்னை மட்டும் ஏன் ?”
என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது அந்த கேள்வியை
கேட்பதில்லை. அதை நினைத்து தான் வியக்கிறேன்.

வி – வாழ்க்கையில் மிகச்சிறந்தவைகளை
நான் அடைவது எப்படி ?
ரா – உன் கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள்.
நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள்.
எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு.
இதுவே வாழ்க்கையில் சிறந்தவைகளை
பெற கடைபிடிக்க வேண்டிய நியதி.
வி – கடைசியாக ஒரே ஒரு கேள்வி. சில நேரங்களில் என்
பிரார்த்தனைகளை இறைவன் கேட்கவில்லையோ என்று
தோன்றுகிறது.
ரா – கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை..!
(There are no unanswered prayers …!)
அச்சத்தை விடு. நம்பிக்கை கொள்.
வாழ்க்கை என்பது தீர்வு காணப்பட வேண்டிய
ஒரு புதிர் தானே தவிர, பிரச்சினை அல்ல.
எப்படி வாழ வேண்டும் என்று மட்டும்
நாம் அறிந்துகொண்டால்,
வாழ்க்கை மிக மிக இனிமையாக மாறி விடும்.


GPF பட்டுவாடாவிற்கான நிதி வந்துவிட்டது. 
வங்கியில் இன்று போடத் துவங்கியுள்ளார்கள்.
-------------------------------------------------
குரூப் C & D தொழிலாளிக்கு 
சோப்பு, துண்டு, டம்ளர், பேனா,டைரி 
மற்றும் வாட்டர் பாட்டிலுக்கான 
தொகை ரூபாய் 750/- இம் மாத 
ஜனவரி 2018 சம்பளத்தில் போடப்படுகிறது.

Thursday, January 11, 2018

11-01-1966 ல் மறைந்தார்.


ஏழைப் பிரதமர்
லால்பகதூர் சாஸ்திரி நினைவு நாள் 
இவரு பிரதமரா ஆன உட​னே​யே அவர வந்து பத்திரிக்​கையாளர்கள் எல்லாம் சூழ்ந்து ​கொண்டு, உங்க முன்​னேற்றத்திற்கு யாரு காரணம் ​சொல்லுங்க? அப்படின்னு ​கேட்டாங்க. அதுக்கு லால்பகதூர் சாஸ்திரி அவர்கள், “ஒரு ​தோட்டக்காரர்தான் நான் இந்த நி​லைக்கு வந்ததற்குக் காரணம்” என்றார். பத்திரிக்​கையாளர்கள் வியப்புடன், ‘எப்படி?’ என்று ​கேட்டனர். அதற்கு லால்பகதூர் சாஸ்திரி அவர்கள், “நான் சிறுவயதாக இருக்கும்​போது எனது தந்​தையார் இறந்துவிட்டார். எனது தாய​ரே என்​னை வறு​மைக்கி​டையில் வளர்த்தார். நான் சிறுவனாக இருந்த​போது அருகில் உள்ள மாந்​தோப்பிற்குச் ​சென்று எனது நண்பர்களுடன் மாங்காய் பறிக்கச் ​சென்​றேன். எனது நண்பர்கள் என்​னை மட்டும் மரத்தில் ஏறி மாங்காய் பறிக்கச் ​சொன்னவுடன் நான் மரத்தில் ஏறி மாங்காய் பறித்துக் ​கொண்டிருந்​தேன். அப்​போது மாந்​தோப்​பைக் காவல் காக்கும் ​தோட்டக்கார் வர​வே எனது நண்பர்கள் அ​னைவரும் ஓடிவிட்டனர். நான்மட்டும் மரத்தில் இருந்ததால் அவரிடம் அகப்பட்டுக் ​​கொண்​டேன்.
என்​னைப் பிடித்த அவர் ஏன்டா இப்படிச் ​செய்யலாமா? என்று ​கேட்டார். நான் அழுது ​கொண்​டே எனது தவறுக்கு அவரிடம் மன்னிப்புக் ​கேட்​டேன். அவ​ரோ தம்பி உனது அப்பா இறந்துவிட்டதால் உனக்கு நீதான் வழிகாட்டி. நீ ​நேர்​மையா இருந்தா ​பெரிய ஆளா வந்துவிடலாம். நல்லது எது ​கெட்டது எதுன்னு நீதான் ​தெரிஞ்சுக்கணும். மற்றவங்களுக்கு அவங்க அப்பா இருக்காங்க. ஒனக்கு நீதான் எல்லா​மே. நல்ல நண்பர்க​ளோட ​சேரு. நல்லவனா இரு. அதுதான் உன்​னை வாழ்க்​கையில உயர்த்தும்” என்று கூறி மாங்காய்க​ளையும் ​கொடுத்து அன்பா அனுப்பி வச்சாரு. அவரு ​சொன்னது எனது மனதில் ஆழமாப் பதிஞ்சு ​போயிருச்சு. அவரு ​சொன்னத அப்​போ​தே க​டைபிடிச்​சேன். அதனாலதான் இன்​றைக்கு இந்த நி​லைக்கு வந்​தேன். அப்​போது அவரு மட்டும் என்​னை வழிப்படுத்தவில்​லை என்றால் இன்​றைக்கு இந்த உயர்ந்த நி​லை​யை என்னால எட்ட முடிஞ்சிருக்காது. என்​னோட உயர்வுக்கு அந்தத் ​தோட்டக்காரர்தான் முக்கிய காரணம்” அப்படின்னு ​சொன்னாரு.
1965 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பீல்டு மார்ஷல் அயூப்கான், நேருவுக்குப் பின் இந்தியா மிகவும் வலுவிழந்திருக்கிறது என்று எண்ணி, பாகிஸ்தான் படைகளை, குஜராத் எல்லையிலும், காஷ்மீர் எல்லையிலும் இந்தியாவை தாக்குவதற்கு ஆணைப் பிறப்பித்தார். ஆனால் பிரதமர் சாஸ்திரி அதற்கெல்லாம் பயப்படவில்லை. நமது ராணுவம் மிகுந்த பலம் கொண்டு தாக்கியதில் பாகிஸ்தான் படைகள் சிதறி ஓடின. பிரதமர் சாஸ்திரி பார்வைக்கு வலுவில்லாதவர் போல் தோற்றம் கொண்டவராக இருந்தாலும், அந்தப் போர் அவரை எப்பேர்பட்டவர் என்று அடையாளம் காட்டியது. ரஷ்யாவின் தலையீட்டால், அப்போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பின் இரு தரப்பினரையும் சமாதானம் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்திட ரஷ்யா முயற்சி செய்தது. அதற்காக பிரதமர் சாஸ்திரி, 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரஷ்யாவில் உள்ள தாஷ்கண்ட் நகருக்கு விரைந்தார்.
அச்சமயத்தில் விவசாயிகளையும், ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்திட லால்பகதூர் சாஸ்திரி ஏற்படுத்திட்ட கோஷம் தான் ‘ஜெய் கிஸான், ஜெய் ஜவான்’ என்ற கோஷம்.
1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் நாள், இரு நாடுகளுக்கிடையே சமாதான ஒப்பந்தமாகிய “தாஷ்கண்ட் சமாதான ஒப்பந்தம்” நிறைவேறியது. அதில் பிரதமர் சாஸ்திரியும், பீல்டு மார்ஷல் அயூப் கானும் கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தம்  கையெழுத்தான பிறகுடெல்லியில் இருந்த மூத்த அ​மைச்சர் நந்தாவுக்கு ​​​தொ​​லை​பேசியின் வழி​யே ​​​செய்தி​யைக் கூறினார் சாஸ்திரி. இருவரும்மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்பின்னர் டெல்லியில் இருந்த தன் மனைவிலலிதா தேவியுடன் ​தொ​லை​பேசியில் சாஸ்திரி பேசினார். “பேச்சுவார்த்தைவெற்றிகரமாக முடிந்ததுநாளை டெல்லி  திரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.  நள்ளிரவு மூன்று மணிக்கு (அப்போது இந்தியாவில் நேரம் இரவு 2 மணிசாஸ்திரிக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதுமருத்துவர் வந்து பரிசோதித்தார்சாஸ்திரியின் நாடித்துடிப்புத் தளர்ந்திருந்ததுமருத்துவர் ஊசி போட்டார்மற்றும்பல மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தனர்எனினும் பலன் இல்லைமரணம் சாஸ்திரி​​யை அள்ளிக் ​கொண்டது.
உயிர் பிரிவதற்கு முன் சாஸ்திரியின் உதடுகள் “ஹரே ராம்” என்றவார்த்தையை  முணுமுணுத்தனசாஸ்திரி மரணம் அடைந்ததை அறிந்துபாகிஸ்தான் அதிபர் அயூப்கான்ரஷிய பிரதமர் கோசிஜின் ஆகியோர் அதிர்ச்சிஅடைந்தனர்விரைந்து சென்று சாஸ்திரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்அப்போது அயூப்கானும்ஜோசி ஜின்னும் கண் கலங்கினார்கள்.
ஜனவரி 11-ஆம் தேதி காலைதாஷ்கண்டில் இருந்து
சாஸ்திரி உடல் விமானம் மூலமாக டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டதுசாஸ்திரியின் உடல் தாஷ்கண்ட் நகரில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்ட காட்சிஉள்ளத்தை  உருக்குவதாக இருந்ததுசாஸ்திரியின் உடல் அவர் தங்கியிருந்தமாளிகையில்மூவர்ணக் கொடியால் போர்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
ரஷியப் பிரதமர் கோசிஜின் கண்ணீர் ததும்ப இறுதி மரியாதை  செலுத்தினார்பின்னர் சாஸ்திரியின் உடல்ஒரு பீரங்கி வண்டியில் வைக்கப்பட்டுதாஷ்கண்ட்விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதுவழி நெடுக சுமார் 10 லட்சம்பேர்சோகத்துடன் நின்று அஞ்சலி செலுத்தினார்கள். 21 பீரங்கி குண்டுகள் முழங்கமரியாதை செலுத்தப்பட்டதுசாஸ்திரி உடல் வைக்கப்பட்டு இருந்த சவப்பெட்டிவிமானத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோதுஅயூப்கானும்கோசி ஜின்னும்தோள் கொடுத்து சுமந்தனர்.  இதுதான் விந்​தையிலும் விந்​தை! ப​கை​மை பாராட்​டிய பாகிஸ்தான் அதிபர் கண்ணீர் மல்க சாஸ்திரியின் உட​லைச் சுமந்தது அ​னைவரது உள்ளத்​தையும் உருக்கிவிட்டது. ப​கைவ​ரின் உள்ளத்​தைக் கூட ​நெகிழ ​வைத்த ​நேர்​மையாளராகச் சாஸ்திரியார் திகழந்த​மை அதன் வாயிலாகப் புலப்பட்டது.
சாஸ்திரியுடன் தாஷ்கண்ட் சென்றிருந்த மந்திரிகள் ஒய்.பி.சவான்சுவரண்சிங்ஆகியோரும் சவப்பெட்டியைச் சுமந்தனர்சாஸ்திரி உடலைப் பெற்றுக் கொள்வதற்காகடெல்லி விமான நிலையத்தில் அப்​போ​தைய குடியரசுத் த​லைவர் ராதாகிருஷ்ணன் கையில் மலர் வளையத்துடன் காத்திருந்தார்சாஸ்திரியின்மரணச் செய்தியை அறிந்ததும்காங்கிரஸ் தலைவர் காமராஜர் விமானம் மூலம்டெல்லிக்கு விரைந்தார்சாஸ்திரி உடல் வந்து சேருவதற்கு முன்பே டெல்லியைஅடைந்துவிமான நிலையத்தில் காத்திருந்தார் காமராஜர்.
மறைந்த ஒப்பந்த ஊழியர் பெருமகளூர் 
தோழர் பி. பழனிவேலு 
குடும்பத்தாருக்கு ரூபாய் 80,000
குடும்ப நிவாரண நிதியளிப்புக் கூட்டம்.
=============================10-01-2018 மாலை 4 மணிக்கு பட்டுக்கோட்டையில் துணைக்கோட்ட அதிகாரி V. ஞானசேகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 
100 க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் பங்கேற்றனர்.
நமது PGM திரு. C.V. வினோத் ITS அவர்கள் 
மறைந்த தோழர் பி. பழனிவேலு அவர்களின் மனைவியிடம் 
ரூபாய் 80,000  நிதியினை அளித்து உரையாற்றினார்.

PGM அவர்கள் பேசும்போது இது மாதிரி இழப்புக்கள் எதிர்வரும் காலங்களில் ஏற்படாதவாறு ஒப்பந்த ஊழியர்கள், தங்களை தற்காத்துக் கொள்ளவேண்டும் என்றும், மறைந்த பழனிவேலைப் போன்று  சேவை மனப்பான்மையோடு பணியாற்றவேண்டும் என்றும் பேசினார். 
அவரது குடும்பத்தாரிடம், உங்கள்  குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களின் படிப்புச் செலவுக்கு என்னாலானதை தொடர்ந்து செய்வேன் என்றும் உறுதியளித்தார். தோழர்கள் பொறுப்பெடுத்து ஒப்பந்த ஊழியர்களுக்கு, இன்சூரன்ஸ், மருத்துவ செலவு, EPF  போன்ற சலுகைகளை பெற்றுத் தர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

கோட்டப் பொறியாளர் திரு. V. பிரகலாதன் அவர்கள் பேசும்போது, 
நமது மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களின் பணி மகத்தானது என்று புகழ்ந்துரைத்தார். PGM அவர்கள் முதன்முதலில் 2500 ரூபாயை வங்கிக்  கணக்குக்கு  அனுப்பி நிதியை துவக்கி வைத்தது அவருக்கு 80000 ரூபாய் நிதியினைப் பெற வகை செய்துள்ளது என்றார். 

NFTE மாவட்டச் செயலர் தோழர். கே. கிள்ளிவளவன் அவர்கள் பேசும்போது, PGM அவர்களின் பணியைப் பாராட்டி, தாயுள்ளத்தோடு அவர் செய்து கொடுத்த ஒரு சில பணிகளை நினைவு கூர்ந்தார்.  
அடிமட்ட தொழிலாளி மேல் அவருக்கிருந்த அக்கறை நம்மை மேலும் நல்ல முறையில் செயல்பட வைக்கிறது என்றார். 
இறுதியாக, புதிய இணைப்புகள் கொடுத்தல், மேளாக்களை வெற்றிகரமாக நடத்துதல், நிலுவை வசூல், உடனடி பழுது நீக்கம், சேவையில் சுறுசுறுப்பு   ஆகியவையே  PGM  அவர்களுக்கு நாம் செய்யும் கைமாறாக இருக்க முடியும் என்று பேசி முடித்தார்.

திரு. கண்ணன் SDE,  FNTO மாவட்டச் செயலர் AMF. ஜெயசீலன், 
ஒய்வு பெற்ற தோழர். சிவசிதம்பரம், TMTCLU மாவட்டச் செயலர் கலைச்செல்வன், மாவட்டத் தலைவர் நாடிமுத்து, முத்துப்பேட்டை சிவசங்கரன்  மற்றும் கிருஷ்ணமூர்த்தி, செல்வகுமார், பேராவூரணி குமார், ரவிச்சந்திரன், குணசேகர் ஆகியோரும் உரையாற்றினார்கள்.

இறுதியாக இந்த நிதியை வெற்றிகரமாக வசூல் செய்து முடித்த  பொருளாளர் கே. விஜயராகவன் அவர்கள் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.     


 

  


 


செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR