தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, February 23, 2018

ஏர்செல் வாடிக்கையாளர்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.
எதிர்பார்த்த கால்களை பேச முடியவில்லை.
கேஸ், வங்கி போன்ற பல்வேறு கணக்குகளுக்கு இந்த எண் கட்டானதால் பல்வேறு சிரமங்கள் அவர்களுக்கு.
ஏர்செல் எண்களில் இருக்கக்கூடிய இருப்புத் தொகை பறிபோகுதல்,
திடீரென்று கட் ஆனதால் தொடர்பு எண்கள் விபரம் கிடைக்காமை,
இப்படி பல்வேறு நெருக்கடிகளுக்கு ஏர்செல் சந்தாதாரர்கள் ஆளாகியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் அரசுத்துறை நிறுவனமான நமது BSNL க்கு
ஏதாவது செய்தாக வேண்டும் என்ற கடமை உள்ளது. இது சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகள் நமக்கு கிடைத்திருக்கிறது.
அவற்றை முறைப்படுத்தி சேவையாற்ற முனைவோம்.

1. ஏர்செல் டவர் கிடைக்கும் பகுதியிலுள்ள தோழர்கள் அந்தந்த பகுதிகளை வாட்ஸப், முகநூல், வலைத் தளம் ஆகியவற்றில் வெளியிடுங்கள். ( ஏனெனில் சில இடங்களில் டவர் கிடைப்பத்தாக கேள்வி ).
2. ‎அடுத்து Airtel மூலம் UPC code எடுக்கும் ஒரு முறை:
UPC Code ஐ எடுக்க Network Settings க்கு சென்று Automatic / Manually என்று இருக்கும். இதில் Manually Select செய்து IND AIRTEL 2G ஐ தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் UPC Code ஐ பெறலாம்.
ஏர்டெல் நெட்வொர்க்கை பயன்படுத்துவதால் Incoming / Outgoing calls பெற இயலாது. இது UPC Code எடுப்பதற்கான ஒரு மாற்று வழி மட்டுமே.
PORT 9876543210 to 1900 க்கு மட்டுமே SMS செல்லும். UPC Code 24 மணி நேரத்தில் பெறலாம். ஆனால் அனைத்து SMS களையும் Receive செய்து கொள்ளலாம்.
ஏதேனும் இடையூறு ஏற்படின் Mobile ஐ Switch Off செய்து On செய்யவும்.
3. நம்மை நாடி வரும் ஏர்செல் வாடிக்கையாளர்களிடம், கூடுதல் இணைப்பாக எப்போதும் BSNL sim ஒன்று வைத்திருங்கள் என்று கூறி அவர்களிடம் நமது சிம் கார்டை கொடுங்கள். விலை ரூ. பத்தோ அல்லது இலவசமோ இந்த நேரத்தில் நாம் அணுகினால் கண்டிப்பாக வாங்கிக் கொள்வார்கள்.
4. ‎இந்த நேரத்தில் நமது PLAN பற்றிய விபரங்கள் தெளிவாக தெரியும் விதத்தில் குறிப்பிட்டவற்றை மட்டும் எழுதி வைக்கவேண்டும்.
உதாரணமாக....


With data.
Rs. 485
90 days
All networks unlimited
1.5 GB daily.
100 SMS DAILY.

WITH OUT DATA
Rs. 99
26 Days.
All networks unlimited.

இப்படி.... இதை மட்டும் போடுவது.
5. இது சம்பந்தமான விபரங்களை, உபயோகிப்பாளர்களின் சந்தேகங்களை தீர்க்கவல்லவர்கள் கூடுதல் உழைப்பை நல்கிட வேண்டும்.


6. ‎இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள அனைவரும்

கடின உழைப்பைக் கொடுப்போம். 10 மணி பணிக்கு வரும் தோழர்கள் 8 மணிக்கே வருவோம். நெரிசலை ஆட்கொள்ளுவோம்.

7. வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை களைய அவர்களிடம் எனது தொலைபேசி எண்ணையும் நீங்கள்

அளிக்கலாம் ( 94861 09185 ).

வாழ்த்துக்கள் தோழர்களே!

அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR